Coming Up Fri 8:00 PM  AEST
Coming Up Live in 
Live
Tamil radio

உங்கள் மாநிலத்தில் அல்லது பிராந்தியத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் எவ்வாறு மாறுகின்றன?

Father helps daughter with mask Source: Getty Images/Morsa Images

கொரோனா வைரஸ் தொடர்பிலான மேலதிக விபரங்களைப்பெற இங்கே அழுத்துங்கள்.   

ஆஸ்திரேலிய மாநிலங்களும் பிராந்தியங்களும் கொரோனா கட்டுப்பாடுகளை எவ்வாறு தளர்த்துகின்றன?

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றமை தொடர்பிலான தகவல்கள் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள அந்தந்த மாநில மற்றும் பிராந்திய அரசுகளின் இணையத்தளத்தைப் பார்வையிடுமாறு பரிந்துரைக்கிறோம். 

விக்டோரியா

மெல்பேர்னில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா தொடர்பிலான கட்டுப்பாடுகள் Sep 28 திங்கட்கிழமை முதல் தளர்த்தப்படுகிறது.

விக்டோரியாவில் வெவ்வேறு கட்டங்களாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. இது குறித்த மேலதிக விபரங்களுக்கு:

Metro Melbourne. New roadmap: https://www.vic.gov.au/coronavirus-covid-19-restrictions-roadmap-metro-melbourne

Regional Victoria. New roadmap: https://www.vic.gov.au/restrictions-roadmap-regional-victoria

மெல்பேர்ன்

சில கட்டுப்பாடுகளில் மாற்றம் கொண்டுவரப்படுகிறது.இதன்படி செப்டம்பர் 28 முதல்:

இரவு 9pm-5am வரை  நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு, நீக்கப்படுகிறது.

ஒரு நாளைக்கு, ஒரு தடவை, வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே shopping செல்லமுடியும் என்ற கட்டுப்பாடும் நீக்கப்படுகிறது. ஆனால் அதற்காக முழுக்குடும்பமும் shopping செல்லலாம் என்பதை இது அர்த்தப்படுத்தாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

Shopping, மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றுக்கு மக்கள் தமது வீட்டிலிருந்து 5 கிலோமீட்டருக்கு உட்பட்ட இடங்களுக்கே செல்ல முடியும் என்ற கட்டுப்பாடு தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்.

வெளியிடங்களில் ஒரே வீட்டிலுள்ளவர்கள் அல்லது இரண்டு வீடுகளைச் சேர்ந்தவர்கள் என அதிகபட்சம் 5 பேர் ஒன்றுகூடலாம். 5 கிலோமீட்டர் விதிக்கு கட்டுப்பட வேண்டும் 

சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் திறக்கப்படுகின்றன.

ஒரு லட்சத்து 27 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியாளர்கள் வேலைத்தளங்களுக்கு திரும்புகின்றனர்.

அனுமதிக்கப்பட்ட பணியாளர்கள் தத்தம் வேலைத்தளங்களிலிருந்து 5 கிலோமீட்டருக்கு உட்பட்ட இடங்களில் உடற்பயிற்சியில் ஈடுபடலாம்.

திருமண நிகழ்வு வெளியிடங்களில் மணமக்களுடன் சேர்த்து 5 பேரை உட்படுத்தி நடத்தப்படலாம். மத ஆராதனைகளும் வெளியரங்களில் அதிகபட்சம் 5 பேருடன் அனுமதிக்கப்படுகிறது.

அக்டோபர் 12 முதல் பள்ளிகள் கட்டம் கட்டமாக ஆரம்பமாகும்.

நிலைமை நன்கு ஆராயப்பட்டு, தொற்றுக்களின் எண்ணிக்கை எதிர்பார்த்ததைப்போன்று குறைவடைந்தால், 19 அக்டோபர் முதல் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படவுள்ளன. இதன்படி:

  • வீடுகளை விட்டு வெளியேசெல்ல காரணம் தேவையில்லை.
  • வீட்டிலிருந்து 5 கிலோமீட்டர்களுக்கு வெளியே பயணம் செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடு நீக்கப்படும்.
  • வெளியிடங்களில் 10 பேரும் வீடுகளில் 5 பேர் வரையும் ஒன்றுகூடலாம்.
  • மேலதிகமாக பல வணிகங்கள் திறக்கப்படும்.

இதையடுத்து இறுதிகட்டமாக, சுகாதார நிலைமைகள் அனுமதித்தால் மேலதிகமாக கட்டுப்பாடுகள் இலகுவாக்கப்பட்டு அவை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டால் மாநிலத்தில் 'COVID Normal' ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.

முகக்கவசம்

விக்டோரியாவில் வாழ்பவர்கள் வீட்டிற்கு வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும். தவறுபவர்கள் 200 டொலர்கள் அபராதம் செலுத்த வேண்டும். 12 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமல்ல

மேலதிக விபரங்களுக்கு: https://www.dhhs.vic.gov.au/face-masks-covid-19

ஒன்றுகூடல் விதிகளுகளை மீறுபவர்கள் 5000 டொலர்கள் அபராதம் செலுத்த நேரிடும்.

வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டவர்கள் அதை மீறினால் $4,957 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும். தனிமைப்படுத்தல் விதிகளை தொடர்ந்து மீறுபவர்களுக்கு 20000 டொலர்கள்வரை அபராதம் விதிக்கப்படும்.

கொரோனா தொற்றுக்குள்ளானோர் சுய-தனிமைப்படுத்தப்பட வேண்டும் மற்றும் தொற்று ஏற்பட்ட நபருடன் வசிக்கும் நபர்கள் அல்லது நெருங்கிய தொடர்பு கொண்டவர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும். மேலதிக விபரங்களுக்கு https://www.dhhs.vic.gov.au/sites/default/files/documents/202008/Diagnosed%20Persons%20and%20Close%20Contacts%20Directions%20%28No%2010%29%20-%2016%20August%202020.pdf

மருத்துவமனைக்குச் சென்று நோயாளர்களைப் பார்வையிடுவது தொடர்பிலும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. மேலதிக விபரங்களுக்கு https://www.dhhs.vic.gov.au/sites/default/files/documents/202008/Hospital%20Visitor%20Directions%20%28No%2010%29%20-%2016%20August%202020.pdf

குழந்தை பராமரிப்பு மையங்கள்

குழந்தை பராமரிப்பு மையங்கள் எல்லா குழந்தைகளுக்கும் திறந்திருக்கும். மேலும் 5 கிலோமீட்டர் கட்டுப்பாடு பொருந்தாது.

ஒரு குழந்தை பராமரிப்பாளர் in-home குழந்தை பராமரிப்புக்கு அனுமதிக்கப்படுவார்.

பள்ளிகள்

சிறப்புப் பள்ளிகளில் உள்ள மாணவர்கள் மற்றும் Prep-6 ஆம் வகுப்பு  மாணவர்கள் அக்டோபர் 12-இலிருந்து பள்ளிகளுக்கு திரும்புகின்றனர்.

VCE மற்றும் VCAL பாடங்களைச் செய்கிறவர்கள் அக்டோபர் 5 முதல் மதிப்பீடுகளுக்கும், பின்னர் அக்டோபர் 12 முதல் கற்றல் நடவடிக்கைகளுக்கு திரும்புகின்றனர்.

Secondary மாணவர்களுக்கு(11-12 ஆம் ஆண்டைத் தவிர) தொலைநிலை மற்றும் நெகிழ்வான கற்றல் தொடர்கிறது

மேலதிகவிபரங்களுக்கு:  https://www.education.vic.gov.au/about/department/Pages/learningfromhome.aspx

நியூ சவுத் வேல்ஸ்

மேலும் தகவலுக்கு: https://www.nsw.gov.au/media-releases/covid-19-restrictions-to-be-tightened)

ஒன்றுகூடலுக்கான கட்டுப்பாடு
உள்ளக மற்றும் வெளியக ஒன்றுகூடல்கள் 20 பேர்.

மத சேவைகள்: 4 சதுர மீட்டருக்கு ஒருவர் விதிக்கு உட்பட்டு, அதிகபட்சம் 100 பேர்

திருமணங்கள்: 4 சதுர மீட்டருக்கு ஒருவர் விதிக்கு உட்பட்டு அதிகபட்சம் 150 பேர் மற்றும் COVID-Safe business பதிவு.

இறுதிச் சடங்குகள் மற்றும் நினைவு சேவைகள்: 4 சதுர மீட்டருக்கு ஒருவர் விதிக்கு உட்பட்டு 100 பேர்.

Pubs, restaurants, bars, cafes, food and drink premises, micro-breweries, cellar doors, casinos, registered clubs, small bars and casinos:

பப்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட COVID-19 கட்டுப்பாடுகள் உணவகங்கள், பார்கள், கஃபேக்கள் மற்றும் கிளப்புகளுக்கும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

-குழு முன்பதிவுகளை அதிகபட்சம் 10 பேராக மட்டுப்படுத்தவேண்டும்.

ஒரு டிஜிட்டல் பதிவு 24 மணி நேரத்திற்குள் உருவாக்கப்பட வேண்டும்.

NSW ஜிம்கள் மற்றும் உடற்பயிற்சி மையங்கள் பின்வருவனவற்றைச் செய்ய வேண்டும்:

  • பதிவுசெய்வதுடன் COVID பாதுகாப்புத் திட்டத்தை வைத்திருங்கள்
  • எல்லா நேரங்களிலும் கடமையில் ஒரு பிரத்தியேக COVID-19 Safe Hygiene Marshal ஒருவரை கொண்டிருக்க வேண்டும்.

வணிகம் மற்றும் பொழுதுபோக்கு

வணிகங்கள் 4 சதுரமீட்டர்களுக்கு ஒரு நபர் விதியைப் பின்பற்றி இயங்கமுடியும்.  வர்த்தகர்கள் ஒரு COVID-19 SAFETY திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் வளாகத்திற்குள் வந்துசென்ற வாடிக்கையாளர்களின் விபரங்களை வைத்திருக்க வேண்டும். வளாகத்திற்குள் நுழையும் எவரும் தங்கள் பெயர் மற்றும் தொடர்பு விவரங்களை வழங்க வேண்டும்.

மேலதிக விபரங்களுக்கு https://www.nsw.gov.au/covid-19/covid-safe-businesses

NSW-விக்டோரியா இடையிலான எல்லை 101 வருடங்களின் பின்னர்  தற்காலிகமாக மூடப்படுகிறது. இவ்விரு மாநிலங்களுக்கிடையில் பயணம் செய்வதற்கு முன் அனுமதிபெற வேண்டும். https://www.service.nsw.gov.au/border-zone-address-check

மேலதிக விபரங்களுக்கு https://www.nsw.gov.au/covid-19/what-you-can-and-cant-do-under-rules/border-restrictions 

NSW மாநிலத்தில் வசிப்பவர்கள் NSW மாநிலத்திற்குள் உல்லாசப்பயணம் மேற்கொள்ள முடியும். விக்டோரியா தவிர வேறுமாநிலத்தவர்களும் நியூ சவுத் வேல்ஸிற்கு சுற்றுலா வரமுடியும். ஆனால் திரும்பிச் செல்லும்போது   தங்கள் சொந்த மாநில விதிகளுக்கு இணங்க நடந்துகொள்ளவேண்டும். ஏராளமான caravan parks மற்றும் camping grounds திறக்கப்பட்டுள்ளன. தேசிய பூங்காக்களைப் பார்வையிடத் திட்டமிடும் பயணிகள் மேலதிக தகவல்களுக்கு www.nationalparks.nsw.gov.au ஐப் பார்க்க வேண்டும்.

NSW அருங்காட்சியகங்கள், galleries மற்றும் நூலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.   COVID-19 பரவல் தடுப்புமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.  

சிறுவர் மற்றும் பெரியவர்களுக்கான சமூக விளையாட்டுக்களுக்கு அனுமதி.

உட்புற இடங்களுக்குள் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ‘4 சதுர மீட்டருக்கு ஒரு நபர்’ விதியால் தீர்மானிக்கப்படும்(அமர்ந்திருக்க வேண்டும்), இறுதிச் சடங்குகள் உட்பட 

அதிகபட்சமாக 40,000 பார்வையாளர்களை உள்ளடக்கும் இடங்களில், கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகள்,  25 சதவீத பார்வையாளர்களுடன் அனுமதிக்கப்படும்.

மேலதிக விபரங்களுக்கு: https://www.nsw.gov.au/covid-19

மாநிலத்திற்குள் திரும்பி வரும் நியூ சவுத் வேல்ஸ் மக்கள் இரண்டு வாரங்களுக்கு தமது சொந்தச் செலவில் ஹோட்டல்களில் தனிமைப்படுதலுக்கு உள்ளாக வேண்டும்.($3000) 

- எல்லை சமூகங்களில் வசிப்பவர்கள்

- முக்கியமான சேவைகளைச் செய்யும் நபர்கள்

-NSW ஊடாக பயணம் செய்பவர்கள் போன்றோருக்கு வேறு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளன.

மேலும் தகவலுக்கு: 

https://www.nsw.gov.au/media-releases/nsw-to-charge-returned-international-travellers-for-hotel-quarantine

எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பகுதிகள் தொடர்பில் அறிந்துகொள்ள: https://www.nsw.gov.au/covid-19/latest-news-and-updates#latest-covid-19-case-locations-in-nsw

  • நீங்கள் COVID-19 தொற்று இனங்காணப்பட்ட இடங்களில்  இருந்திருந்தால் உடனடியாக 14 நாட்கள் உங்களைத் தனிமைப்படுத்தவும்
  • உங்களுக்கு COVID-19 அறிகுறிகள் இல்லாவிட்டாலும் சோதனை செய்யுங்கள்
  • COVID-19 அறிகுறிகளைக் கவனிக்கவும், ஏதேனும் அறிகுறிகள் தோன்றினால் மீண்டும் பரிசோதிக்கவும்
  • நீங்கள் எதிர்மறையான சோதனை முடிவைப் பெற்றாலும், 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும்

பள்ளிகள்

COVID-19 அறிகுறிகளைக் கொண்ட எந்த NSW மாணவரும் negative சோதனை முடிவு வரும் வரை பள்ளிக்குத் திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
பள்ளி formals, dances, graduations மற்றும் பிற சமூக நிகழ்வுகள் அனுமதிக்கப்படாது.
பள்ளிப்படிப்பு நிறைவை அனுசரிக்க பெற்றோர்கள் இல்லாமல் year 12 assembly நடத்த முடியும்.
பாடத்திட்டத்தை வழங்குவதற்கு அவசியமான வழங்குநர்கள் மட்டுமே தொடர்ந்து சேவைகளையும் திட்டங்களையும் வழங்க முடியும்.
Interschool நடவடிக்கைகள் உள்ளூர் சமூகம் அல்லது வலயத்திற்குள் இருக்க வேண்டும்.
பெற்றோர்/carers மற்றும் பிற அத்தியாவசியமற்ற பார்வையாளர்கள் பள்ளி தளத்தில் அனுமதிக்கப்படுவதில்லை.

மேலதிக விபரங்களுக்கு: https://education.nsw.gov.au/covid-19/advice-for-families#School2

குயின்ஸ்லாந்து

ஒன்றுகூடலுக்கான கட்டுப்பாடு 

நண்பர்கள், குடும்பம் மற்றும் சமூக ஒன்றுகூடல்களில் 30 பேர் வரை கலந்துகொள்ளலாம்.

திருமணங்கள் மற்றும் இறுதி சடங்குகள் (அதிகபட்சம் 100 பேர்)

வணிகம் மற்றும் பொழுதுபோக்கு,   

கொரோனா தொற்று ஏற்பட்டு பணிக்கு சமூகமளிக்கமுடியாதவர்கள் மற்றும் தனிமைப்படுதலுக்கு உட்படுமாறு பணிக்கப்பட்டவர்கள் paid leave- பெறமுடியாத சூழ்நிலையை எதிர்கொண்டால், அவர்களுக்கு  ஒரு தடவை மாத்திரம்1500 டொலர்களை  December 2020 வரை வழங்குவதற்கான நடவடிக்கைகளை குயின்ஸ்லாந்து அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. Job keeper திட்டத்திற்கு தகுதிபெறாத தொழிலாளர்களையும் இது உள்ளடக்குகிறது.

Outback

உணவகங்கள், cafes, pubs, registered & licensed clubs, RSL clubs & hotels ஒரே நேரத்தில் 50 பேர் என்ற அளவில் இயங்கலாம். (அங்கு வசிப்பவர்களுக்கு மட்டும்)

பயணக்கட்டுப்பாடு

குயின்ஸ்லாந்து அரசாங்கம் எல்லை பாஸ் மற்றும் identification screening உள்ளிட்ட புதிய எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் கொண்டுள்ளது.

விக்டோரிய மாநிலத்தவர்களுக்கு  குயின்ஸ்லாந்து எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

NSW இலிருந்து பயணிக்கும் எவரும் குயின்ஸ்லாந்திற்குள் நுழைய தடை விதிக்கப்படும்.

செப்டம்பர் 25 வெள்ளிக்கிழமை முதல், குயின்ஸ்லாந்தின் எல்லைகள் கன்பராவாசிகளுக்குத் திறக்கப்படுகிறது.

மேற்கு ஆஸ்திரேலியா, தெற்கு ஆஸ்திரேலியா; டாஸ்மேனியா மற்றும் NT ஆகியவற்றிலிருந்து பயணிக்கும் எந்தவொரு நபரும்  border declaration நிபந்தனைகளை நிறைவுசெய்யும்பட்சத்தில் குயின்ஸ்லாந்துக்குள் நுழையலாம். Pass-க்கு விண்ணப்பிக்க: https://www.covid19.qld.gov.au/government-actions/border-closing

வீடு திரும்பும் குயின்ஸ்லாந்து மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த செலவில் 14 நாட்களுக்கு ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

Outback-இல் வசிப்பவர்கள் வீட்டிலிருந்து 500 கிலோமீட்டர்கள் வரை பயணம் செய்யலாம்.

பூர்வகுடி சமூகங்கள் மற்றும் biosecurity பிரதேசங்கள் 

ஆஸ்திரேலிய அரசால் வரையறுக்கப்பட்ட biosecurity பிரதேசங்களுக்குப் பயணம் செய்வதற்கான கட்டுப்பாடுகள் 3 கட்டங்களாக தளர்த்தப்படுகின்றன. இதுகுறித்த மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள :https://www.datsip.qld.gov.au/resources/datsima/covid/remote-communities-roadmap.pdf

பள்ளிகள்
பள்ளிகள் ஆரம்பமாகிவிட்டன. 

மேலதிக விபரங்களுக்கு: https://www.qld.gov.au/covid-19/government-actions/roadmap-to-easing-queenslands-restrictions

தெற்கு ஆஸ்திரேலியா

தனியார் வசிப்பிடங்களில் ஒன்றுகூடலுக்கான கட்டுப்பாடு ஆகக்கூடியது 50 பேர் வரை.

தனியார் வசிப்பிடங்கள் அல்லாத வேறு இடங்களில் நடத்தப்படும் ஒன்றுகூடல்களில் ஆகக்கூடியது 100 பேர் மட்டுமே இருக்கலாம். 

விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள எல்லை சமூகங்களுக்கான 40km travel buffer zone மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

மேற்கு ஆஸ்திரேலியா, Northern Territory, குயின்ஸ்லாந்து அல்லது டாஸ்மேனியாவிலிருந்து சிட்னி அல்லது கன்பரா விமான நிலையங்கள் வழியாக தெற்கு ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்கள் 14 நாட்கள் சுய-தனிமைப்படுத்தலை மேற்கொள்ள வேண்டியதில்லை.  

Pubs, bars மற்றும் உணவகங்கள்: அமர்ந்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே மது பரிமாற முடியும்.

Step 3-இன் கீழ் அனுமதிக்கப்பட்ட அனைத்து வணிகங்கள், செயல்பாடுகள் மற்றும் கூட்டங்கள் Public activities direction no 3 இல் பட்டியலிடப்பட்டுள்ளன.

மேலதிக விபரங்களுக்கு: https://www.covid-19.sa.gov.au/__data/assets/pdf_file/0016/223072/FAQ-Step-3-01072020.pdf.

ஏற்கனவே உள்ள COVIDSafe திட்டத்துடன் இயங்கும் வணிகங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நடவடிக்கைகள், ஒரு புதிய திட்டத்தை உருவாக்கத் தேவையில்லை.  

COVIDSafe திட்டம் இல்லாதவர்கள் தொடங்குவதற்கு முன்பு தமக்கான திட்டத்தை உருவாக்க வேண்டும்.

பயணக்கட்டுப்பாடு

தெற்கு ஆஸ்திரேலியாவில் வழக்கமாக வாழ்பவர்கள் உட்பட எவரும் விக்டோரியாவிலிருந்து தெற்கு ஆஸ்திரேலியாவுக்கு வர முடியாது.

அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே விக்டோரியாவிலிருந்து தெற்கு ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியும். எல்லைப்பகுதிகளில் வாழ்பவர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். 

NT, QLD, TAS,ACT மற்றும் WA இலிருந்து பயணிகள் தடையின்றி நேரடியாக தெற்கு ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியும்.

நீங்கள் தெற்கு ஆஸ்திரேலியாவுக்கு பயணத்தைத் திட்டமிடுகிறீர்களானால், உங்கள் பயணம் எங்கு தொடங்குகிறது என்பதைப் பொருட்படுத்தாமல், நீங்கள் புறப்படுவதற்கு குறைந்தது 3 நாட்களுக்கு முன்பே Cross Border Travel பதிவை முடிக்கவும்: https://www.police.sa.gov.au/online-services/cross-border-travel-application

மாநிலத்திற்குள் பயணம் செய்யலாம்.

பின்வரும் சந்தர்ப்பங்களில் நீங்கள் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும்:

-நீங்கள் NSW-இலிருந்து தெற்கு ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ளீர்கள்

-நீங்கள் வெளிநாடுகளில் இருந்து தெற்கு ஆஸ்திரேலியா வந்துள்ளீர்கள்

- COVID-19 தொற்று ஏற்பட்ட ஒருவருடன் நீங்கள் நெருங்கிய தொடர்பில் இருந்தீர்கள்

-உங்களுக்கு COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தால்

பள்ளிகள்
இரண்டாம் தவணைக்காக பள்ளிகள் ஆரம்பித்துவிட்டன.

பள்ளிகள் குறித்த மேலதிக விபரங்களுக்கு https://www.education.sa.gov.au/sites/default/files/term-2-operating-guidelines.pdf 
மேலதிக விபரங்களுக்கு: https://www.covid-19.sa.gov.au/

மேற்கு ஆஸ்திரேலியா

மேற்கு ஆஸ்திரேலியா  நான்காம் கட்டமாக கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது. 

உள்ளரங்கு மற்றும் வெளியரங்கு  ஒன்றுகூடல்களுக்கென விதிக்கப்பட்ட  கட்டுப்பாடுகள் மற்றும் 100/300 விதி ஆகியன நீக்கப்படுகின்றன. ஒன்றுகூடலுக்கான வரம்பு  2 சதுர மீட்டருக்கு ஒருவர் என்ற விதியின் அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்கப்படும்.

மேற்கு ஆஸ்திரேலியாவின் முக்கிய விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அரங்கங்களின்  மொத்த கொள்ளளவில் 50 வீதத்திற்கு  மாத்திரமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.

மேலதிக விபரங்களுக்கு https://www.wa.gov.au/government/publications/phase-4-easing-of-restrictions-frequently-asked-questions

பயணக்கட்டுப்பாடு
மாநிலத்திற்குள் பயணம் செய்யலாம். 

விதிவிலக்கு பெற்றவர்கள் மாத்திரம் மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்ய முடியும். மேலதிக விபரங்களுக்கு https://www.wa.gov.au/government/document-collections/covid-19-coronavirus-state-of-emergency-declarations#travel-and-border-state-wide

Remote Aboriginal communities போன்றவற்றுக்குச் செல்வதற்கான  கட்டுப்பாடு தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்.

பள்ளிகள் குறித்த விபரங்களுக்கு https://www.wa.gov.au/organisation/department-of-the-premier-and-cabinet/covid-19-coronavirus-education-and-family-advice  

மேலதிக விபரங்களுக்கு: http://www.wa.gov.au/covid19roadmap

Oct 24 முதல் கட்டுப்பாடுகள் ஐந்தாம் கட்டமாக தளர்த்தப்படும்

டஸ்மேனியா

ஒன்றுகூடலுக்கான கட்டுப்பாடு 

வீட்டிலுள்ளவர்கள் தவிர 20 பேர்

வணிகம் மற்றும் பொழுதுபோக்கு

2 சதுர மீட்டருக்கு ஒரு நபர் என்ற அடிப்படையில் அங்கு அனுமதிக்கப்படக்கூடியவர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். உட்புறங்கள்-அதிகபட்சம் 250 பேர்,  மற்றும் வெளிப்புறங்களில்1000 பேர் (Sep 25 முதல்) https://www.coronavirus.tas.gov.au/families-community/gatherings-density-and-physical-distancing

பயணக்கட்டுப்பாடு

நீங்கள் டஸ்மேனியாவிற்குள் எங்கும் பயணம் செய்யலாம் மற்றும் தங்கலாம், ஆனால் ஒன்றுகூடலுக்கான  கட்டுப்பாடுகளுக்கு நீங்கள் இணங்க வேண்டும்.

எல்லைகள் ஆகக்குறைந்தது 01 Dec 2020 வரை மூடப்பட்டிருக்கும்.

அவசரகால நிலை 26 Oct 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வேறொரு பகுதியிலிருந்தோ அல்லது வெளிநாட்டிலிருந்தோ டாஸ்மேனியாவுக்குச் செல்ல விரும்பும் எவரும், நுழைவு அனுமதி கோருவதற்கு   https://www.g2gpass.com.auக்குச் சென்று G2G PASS எனப்படும் புதிய ஆன்லைன் பயண பதிவு முறைமையில் பதிவு செய்ய வேண்டும்.

கடந்த 14 நாட்களில் பயணிகள் இருந்த இடத்தின் அடிப்படையில் Good to Go App  துல்லியமாக நிரப்பப்பட வேண்டும்.தவறான தகவல்களை வழங்குபவர்களுக்கு, 16800 டொலர்கள் வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

தனிமைப்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டு வேலைக்கு செல்ல முடியாவிட்டால்  டாஸ்மேனிய தொழிலாளர்கள்  $1500 Pandemic Leave Disaster கொடுப்பனவுக்கு தகுதி பெறுவர்.

குயின்ஸ்லாந்திலிருந்து திரும்பி வருதல்: பிரிஸ்பேன் நகரம், Ipswich நகரம் மற்றும் Logan நகரம் ஆகிய பகுதிகளில் நேரம் செலவிட்ட டாஸ்மேனியர்கள் திரும்பிவரும்போது அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட தங்குமிடங்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை முடிக்க வேண்டும்.

பள்ளிகள்
எல்லா வகுப்புகளும் தொடங்கிவிட்டன. மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்கிறார்கள். 

மேலதிக விபரங்களுக்கு:  https://www.coronavirus.tas.gov.au/travellers-and-visitors/coming-to-tasmania

Northern Territory

ஒன்றுகூடல் கட்டுப்பாடுகள் கிடையாது. ஆனால் சமூக இடைவெளி பேணப்பட வேண்டும்.

வணிகம் மற்றும் பொழுதுபோக்கு
நீச்சல், மீன்பிடி, படகுப்பயணம் ,Cafes, உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், நூலகங்கள்,bars, sports training, indoor markets, galleries, museums, exercise, outdoor gatherings, Skate parks, pools, playgrounds,outdoor gyms, bars, sports training, indoor markets, galleries,museums,gaming activities,Team sports, Cinema , concert hall, music hall, dance hall, nightclubs, beauty therapy,cosmetic services,tattooing or body art & piercing, amusement park, community centre, recreation centre , play centre உள்ளிட்டவை இயங்கலாம்.

பயணக்கட்டுப்பாடு 

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள், Howard Springs தங்குமிடத்திற்கு  கட்டாய  தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்படுவார்கள்.இதற்கென ஒருவரிடம் 2,500 வசூலிக்கப்படும்.

வேறு மாநிலங்களிலிருந்து Northern Territory-க்கு வருபவர்கள் தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட இடங்களைச்சேராதவர்கள் எனில் அவர்களுக்கு தனிமைப்படுத்தல் தேவையில்லை. https://coronavirus.nt.gov.au/travel/quarantine/hotspots-covid-19

வேறு மாநிலங்களிலிருந்து வரும் அனைவரும் எல்லை நுழைவு படிவத்தை வருகைக்கு 72 மணி நேரத்துக்கு முன்னதாக பூர்த்தி செய்ய வேண்டும்.

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குறைந்தபட்சம் இன்னும் 18 மாதங்களுக்கு வரமுடியாதவாறு NT தனது எல்லைகளை தொடர்ந்தும் மூடி வைத்திருக்கும் (ஆகஸ்ட் 2020 முதல்) வேண்டுமானால் இம்மாநிலத்தவர்கள் உள்ளே வர முடியும், ஆனால் கட்டாயமாக 14 நாள் ஹோட்டலில் தனிமைப்படுத்தலை தங்கள் சொந்த செலவில் மேற்கொள்ள வேண்டும்.

NT பிராந்திய மக்களுக்கென பெரும்பாலான இடங்கள் திறந்திருக்கும்

கீழ்வரும் பிராந்தியங்களில் பூங்காக்கள் திறந்திருக்கின்றனவா என்பதை அறிந்துகொள்ள தரப்பட்டிருக்கும் இணைப்புக்களுக்குச் செல்லுங்கள். 

Darwin region https://aus01.safelinks.protection.outlook.com/GetUrlReputation

Katherine region https://nt.gov.au/leisure/parks-reserves/plan-your-visit/check-park-open-katherine

Tennant Creek and Barkly region https://nt.gov.au/leisure/parks-reserves/plan-your-visit/check-park-open-tennant-creek-barkly

Alice Springs region https://nt.gov.au/leisure/parks-reserves/plan-your-visit/check-park-open-alice-springs

பள்ளிகள்
பள்ளிகள் இயங்கிவருகின்றன.
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப விரும்பாத பெற்றோர் தொலைதூரக் கல்வியைத் தொடர வேண்டும்.

பள்ளிகள் குறித்த மேலதிக விபரங்களுக்கு https://education.nt.gov.au/publications/information-for-term-2-2020?SQ_VARIATION_814972=0

மேலதிக விபரங்களுக்கு https://coronavirus.nt.gov.au/steps-to-restart/roadmap-new-normal 

FAQ: https://coronavirus.nt.gov.au/__data/assets/pdf_file/0007/819106/roadmap-faqs.pdf

Australian Capital Territory

ஒன்றுகூடலுக்கான கட்டுப்பாடு

வீட்டு வருகைக்கு வரம்பு இல்லை.
பொதுநிகழ்வுகளில் 100 பேர்வரை ஒன்றுகூடலாம். இறுதிச் சடங்குகள் உட்பட(ஒவ்வொரு உட்புற மற்றும் வெளிப்புற இடத்திற்கும் 4 சதுர மீட்டருக்கு 1 நபர்)

சிறிய இடங்களில் 25 வாடிக்கையாளர்கள் அல்லது நான்கு சதுர மீட்டருக்கு ஒருவர் இருக்கலாம் : https://www.covid19.act.gov.au/news-articles/cautious-step-in-act-covid-19-restrictions 

ஒன்றுகூடல் பற்றியகூடுதல் தகவல்கள்: https://www.covid19.act.gov.au/protecting-yourself-and-others/groups-and-gatherings

வணிகம் மற்றும் பொழுதுபோக்கு

ACT வணிகங்களுக்கான வழிகாட்டல்கள்
https://www.covid19.act.gov.au/resources

செப்டம்பர் 18 2020 முதல், கன்பராவிலுள்ள உணவகங்கள், கஃபேக்கள் மற்றும் பார்கள் போன்றவை, இடத்தின் அளவைப் பொருட்படுத்தாமல் 25 பேரை அனுமதிக்கலாம் 

Full-contact உடனான விளையாட்டு, நடனம் மற்றும் தற்காப்புக் கலைகளுக்கான  போட்டி  இப்போது அனுமதிக்கப்படுகிறது. https://www.covid19.act.gov.au/what-you-can-do/faqs-changes-to-restrictions/sport-recreation-pools

பின்வருவனவற்றில் 4 சதுர மீட்டர் விதியைப் பின்பற்றி 100 நபர்கள் வரை அனுமதிக்கலாம் (ஊழியர்கள் உட்பட)

வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மத விழாக்கள்.
சினிமாக்கள் மற்றும் திரைப்பட அரங்குகள்
உட்புற மற்றும் வெளிப்புற கேளிக்கை மையங்கள்
ஆர்கேட் மற்றும் விளையாட்டு மையங்கள்
ஜிம்கள், சுகாதார கிளப்புகள், உடற்பயிற்சி, நடனம்
நீச்சல் குளங்கள்
சமூக விளையாட்டு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட விளையாட்டு நடவடிக்கைகள்
Choirs, bands மற்றும் orchestra 
தனிப்பட்ட சேவைகள் (beauty & nail salons, tattoo, மசாஜ் பார்லர்கள் போன்றவை) Caravan parks, campgrounds மற்றும்  camp sites

பயணக்கட்டுப்பாடு

விக்டோரியாவிலிருந்து ACT- க்குள் பயணிக்கும் எவருக்கும் (ACT குடியிருப்பாளர்கள் தவிர) அவர்களுக்கு விதிவிலக்கு வழங்கப்படாவிட்டால், நுழைவு அனுமதி மறுக்கப்படும்.

ACT குடியிருப்பாளர்கள் வீடு திரும்பலாம், ஆனால் விக்டோரியாவை விட்டு வெளியேறியதிலிருந்து 14 நாட்கள் வரை தம்மை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் ACT திரும்புவது தொடர்பில் ACT Health-க்கு அறிவிக்க வேண்டும்

பள்ளிகள் 
On-campus கற்றல் முறைக்கு அரச பள்ளிகள் திரும்பிவிட்டன.
மேலதிக விபரங்களுக்கு https://www.covid19.act.gov.au/updates

ஜூலை முதல் சர்வதேச மாணவர்கள் படிப்படியாக மீண்டும் திரும்பும்வகையில் அரசு நடவடிக்கைகளைமெற்கொண்டுவரும் நிலையில் இதனை நடைமுறைப்படுத்தும் முதல் பிராந்தியமாக இருக்கும்

உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.

விக்டோரியாவில் ஒவ்வொருநாளும் இரவு 8 மணிமுதல் அதிகாலை 5 மணிவரையிலான ஊரடங்கு உத்தரவு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு:https://www.dhhs.vic.gov.au/updated-restrictions-announcement-2-august-covid-19

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.