ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அதன் இராஜதந்திர முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர சீனா ஒரு சிறிய, தற்காலிக நடவடிக்கையை எடுத்துள்ளது – பிரதமர் Anthony Albanese அவர்களுக்கு சீனப் பிரதமர் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
சீன அதிகாரிகள் வரிசையில் இரண்டாவது முக்கிய தலைவரிடமிருந்து இந்த வாழ்த்து செய்தி வந்திருக்கின்ற போதிலும், இரு நாடுகளுக்குமிடையில் உறவு மேம்படும் என்பதற்கான ஒரு சிறிய அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
இருந்த போதிலும், பசிஃபிக் பிராந்தியத்தில் சீனா தன் செல்வாக்கை அதிகரித்து வருவது, குறிப்பாக சாலமன் தீவுகளுடன் ஒரு சர்ச்சைக்குரிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளமை எந்தவொரு நல்லுறவிற்கும் குந்தகமாக அமையக்கூடும்.
இதற்கிடையில், வெளியுறவு அமைச்சர் Penny Wong பசிஃபிக் பிராந்திய நாடுகளுடன் உறவை வளர்க்கும் முயற்சியை முடுக்கி விடும் பணியைத் தொடங்கியுள்ளார். ஃபிஜி நாட்டின் தலைவர் Frank Bainimarama அவர்களை சீன வெளியுறவு அமைச்சர் சந்திக்கச் செல்லும் அதே வேளை எமது வெளியுறவு அமைச்சரும் செல்கிறார்.
இவை குறித்து Krishani Dhanji மற்றும் Richelle Harrison Plesse எழுதிய விவரணங்களை மூலமாகக் கொண்டு, விவரணம் ஒன்றைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.