Coming Up Wed 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio

ரஜினியின் நிஜ முகம் எப்படியானது?

SBS Tamil Source: SBS Tamil

ரஜினியின் திரையாளுமை என்பது, சாதீயம், பிராமணீயம், இந்துத்துவம் போன்ற ஆதிக்க சக்திகளின் பிரதிநிதியாக இருப்பதோடு, பழமைவாதக் கருத்துக்களையும், மூட நம்பிக்கைகளையும் ஊக்குவிப்பதாகவும் இருந்துவருகிறது என்கிறார் முனைவர் தாமு. திரையுலகில் எம்ஜியார் விட்டுச்சென்ற வெற்றிடம்; கவர்ச்சிகர நாயகர்ளுக்கு அப்பாற்பட்டு, யதார்த்தமாய்த் தோற்றமளிக்கும் கதாநாயகனை எதிபார்த்த தமிழ் ரசிகர்கள்; தமிழ் சினிமாவில், புதிய-பிராமணீய சக்திகளின் ஆதிக்கம்; ரசிகர்களின் அரசியல் எதிர்பார்ப்பை, தன்னுடைய படங்களின் வெற்றிக்கு சாமர்த்தியமாக பயன்படுத்தும் சந்தர்ப்பவாதம், என்று இவையனைத்தும் கலந்த ஆளுமையே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்கிறார் அவர். முனைவர் தாமு படைக்கும் கொட்டகையிலிருந்து கோட்டைக்கு தொடரின் பத்தாம் பாகம்.ஒலிக்கும் குரல்கள்: மகேந்திரராஜா பிரவீணன் & காந்திமதி தினகரன்; தயாரிப்பு: றைசெல்