கொழும்பு காலிமுகத்திடலில் அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வந்தவர்கள் மீது அரசுக்கு ஆதரவான குழுக்கள் கடந்த 09ம் திகதி தாக்குதல்களை மேற்கொண்டன. அதனை தொடர்ந்து நாடு முழுவதும் வன்முறைகள் வெடித்தன. இது தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வுத்துறை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில், குழப்பம் விளைவித்தவர்களை விட ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களையே காவல்துறை அதிகம் கைது செய்வதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் அவசரகால சட்டத்தை தொடர்ந்து நீடிப்பதற்கு பாராளுமன்றத்தின் அனுமதிபெறாத நிலையில் அது செயலிழந்துள்ளது. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.