அரை நூற்றாண்டுக்கும் மேலாக திராவிடக் கட்சிகளின் கோட்டையாக இருந்துவரும் தமிழகத்தில், ரஜினிகாந்தின் புதிய கட்சி அறிவிப்பை நேற்று அதிரடியாக வெளியிட்டார்.
ரஜினியின் புதிய அரசியல் கட்சி வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் தமிழக அரசியலில் இவ்வித தாக்கங்களை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலில், ரஜினி ஆரம்பிக்கக்கூடிய கட்சியின் தலைமையில் ஒரு கூட்டணி நிச்சயம் அமையும் என்று ஒரு தரப்பினரும், ரஜினியின் அரசியல் கட்சியால் பெரிய தாக்கங்களை ஏற்படுத்த முடியாது என்று மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.
தி.மு.க-வைப் பிடிக்காதவர்கள் அ.தி.மு.க-வுக்கும், அ.தி.மு.க-வைப் பிடிக்காதவர்கள் தி.மு.க-வுக்கும் வாக்களிப்பது என்ற நிலையை ரஜினியின் அரசியல் பிரவேசம் மாற்றும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் அவரின் ரசிகர்கள். இவை குறித்த செய்தியைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.