குறைந்த எண்ணிக்கையில் வெளிநாட்டு மாணவர்கள் மீண்டும் வரத்துவங்கியுள்ளனர். கடந்த இரு ஆண்டுகளாக இவர்கள் கோவிட் பெருந்தொற்று காரணமாக வரமுடியவில்லை. இது ஆஸ்திரேலிய பொருளாதாரத்திலும், பிற அம்சங்களிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இங்கு வராத வெளிநாட்டு மாணவர்கள் வேறுநாடுகளுக்கு செல்கின்றனர் என்றும் ஏன் அவர்கள் உடனடி இங்கு வரப்போவதில்லை என்றும் விளக்குகிறார் பெர்த் நகரில் வாழும் கோவிந்தராஜன் அப்பு அவர்கள். பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து கட்டுரை எழுதும் அவர், ஆஸ்திரேலியாவின் CPA, CA மற்றும் AIM உயர்க்கல்வி நிறுவனங்களில் உறுப்பினராக இருப்பதோடு பல ஆண்டுகளாக அரசு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.