Coming Up Sun 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio
SBS தமிழ்

முரளிதரனின் வேடத்தில் நடிப்பது தொடர்பில் விஜய் சேதுபதி அன்று நம்மிடம் தெரிவித்தது!

Source: SBS

நடிகர் விஜய் சேதுபதி கடந்த ஆண்டு மெல்பேர்னுக்கு வந்திருந்தபோது இந்தவிடயம் தொடர்பில் நாம் கேட்டபோது இத்திரைப்படத்தில் தான் நடிப்பது உறுதி என அப்போது நமக்குத் தெரிவித்திருந்தார். அத்துடன் அந்தப் படத்தில் நடிப்பதற்கான காரணம் தொடர்பிலும் விளக்கியிருந்தார்.

இலங்கை கிரிக்கட் நட்சத்திரம் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றைப்பேசும் 800 என்ற தலைப்பிலான தமிழ்த் திரைப்படத்தில் முரளிதரனின் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது குறித்த செய்திகள் மீண்டும் சூடுபிடித்துள்ளன.

இலங்கை அணியின் முன்னாள் வீரரும் சுழற்பந்துவீச்சாளருமான முத்தையா முரளிதரனை மையப்படுத்தி தயாரிக்கப்படும் திரைப்படத்தில் முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக வெளியான செய்தியையடுத்து இதுகுறித்த வாதபிரதிவாதங்கள் ஆரம்பமாகியிருந்த பின்னணியில் தற்போது இவ்விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

குறிப்பாக முத்தையா முரளிதரன் தமிழராக இருந்தாலும் இலங்கை அரசுக்கு ஆதரவாகச் செயற்பட்டதுடன் போர் நடைபெற்றபோதுகூட தமிழர்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்காதவர் என்றும்- போர் முடிந்தபின்னரும் சிங்கள கிராமங்களுக்கு உதவி செய்துவரும் அவர் தமிழர்களை ஒருபோதும் கண்டுகொள்வதில்லை என்றும்- இக்காரணங்களால் முத்தையா முரளிதரனின் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என ஈழப்பின்னணி கொண்ட பலரும் தமிழகத்தின் சில அமைப்புகளும் தொடர்ந்தும் குரல் எழுப்பிவருகின்றனர்.

உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற நடிகர் விஜய் சேதுபதி அந்த மக்களது மனங்களை நோகடிக்காமல் இப்படத்திலிருந்து விலகிக்கொள்ள வேண்டுமெனவும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி கடந்த ஆண்டு மெல்பேர்னுக்கு வந்திருந்தபோது இந்தவிடயம் தொடர்பில் நாம் கேட்டபோது 800 திரைப்படத்தில் தான் நடிப்பது உறுதி என அப்போது நமக்குத் தெரிவித்திருந்தார். அத்துடன் அந்தப் படத்தில் நடிப்பதற்கான காரணம் தொடர்பிலும் விளக்கியிருந்தார்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
முரளிதரனின் வேடத்தில் நடிப்பது தொடர்பில் விஜய் சேதுபதி அன்று நம்மிடம் தெரிவித்தது! 15/10/2020 02:10 ...
கல்விக்காகத் தாலாட்டும் சிட்னி பெண் 05/12/2020 17:05 ...
தடுப்பூசிக்கு ஒப்புதல் விரைவில் வழங்கப்படுமா? 04/12/2020 02:55 ...
ரஜினியின் அரசியல் வருகை.... என்ன நினைக்கின்றனர்? 04/12/2020 06:47 ...
"பிரதமரின் கோரிக்கை சீனாவில் தேவையில்லாத கவனத்தை ஈர்த்துள்ளது" 04/12/2020 08:54 ...
ஆரோக்கியமான உணவு பொருட்களை தெரிவு செய்ய சுலபமான வழி!! 04/12/2020 11:14 ...
பூர்வீகக் குடிமக்கள் புனிதமானவை எனக்கருதும் மரங்கள் பாதுகாக்கப்படும் 03/12/2020 09:23 ...
'ஆஸ்திரேலியாவை ஆத்திரமூட்டும் செயல் ஆனால் பிரதமரின் பதில் சிறந்ததல்ல' 02/12/2020 05:54 ...
புதிதாக Property Tax: வீடு வாங்குவோருக்கான நன்மைகள்! தகவல்கள் 02/12/2020 10:52 ...
மலச்சிக்கலுக்கு சித்தா மருத்துவம் தரும் தீர்வு என்ன? 02/12/2020 05:44 ...
View More