ஆஸ்திரேலியாவில் அடைக்கலமாக விரும்புவோருக்கு கடந்த சில ஆண்டுகளாக நுழைவுவாயிலாக விளங்கியது கிறிஸ்துமஸ் தீவு. இங்கிருந்த தடுப்புக்காவல் மையம் பிரசித்தமானது. கிறிஸ்துமஸ் தீவு என்பது அகதிகளோடு அடையாளம் காணப்பட்டாலும், இந்த தீவின் வரலாறு வித்தியாசமானது. ஆஸ்திரேலியாவைச் சார்ந்த 8,222 தீவுகளுள் ஒன்று என்றாலும் தனக்கென்று தனித்த சிறப்புடைய கிறிஸ்துமஸ் தீவின் வரலாற்றை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் கீதா மதிவாணன் அவர்கள்.
கிறிஸ்துமஸ் தீவு: அகதிகளின் நுழைவாயில் தீவின் உண்மை வரலாறு என்ன?
Source: SBS Tamil