ஜெர்மனியின் அரசியலில் 16 ஆண்டுகள் கோலோச்சிய அதிபர் Angela Merkel கடந்த வாரம் பதவி விலகினார். புதிய அதிபராக Olaf Scholz பொறுப்பேற்றார். மெர்கலின் சாதனை என்ன? வந்திருக்கும் ஷோல்சுக்கு காத்திருக்கும் சவால் என்ன? குறிப்பாக ஜெர்மனியிலுள்ள அகதிகளுக்கு புதிய அரசு என்ன செய்யும்? இப்படியான கேள்விகளோடு ஜெர்மனி அரசியலை அலசுகிறார் பாரிஸ் நகரில் வாழும் உதயன் பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியரும், தற்போது சுயாதீனமான ஊடகவியலாளராக பணியாற்றுகின்றவருமான கார்த்திகேசு குமாரதாசன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.