Coming Up Fri 8:00 PM  AEST
Coming Up Live in 
Live
Tamil radio

நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் ஆரம்பம்

Kiongozi wa Victoria Daniel Andrews, amesema anataka idadi ya watu 80,000 wahudhurie mechi ya kriketi ya Boxing Day Test katika uwanja wa MCG, Melbourne. Source: AAP

கொரோனா வைரஸ் குறித்து அக்டோபர் மாதம் 24ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

  • பூர்வீக குடி மக்களுக்குத் தடுப்பூசி வழங்கும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது
  • குயின்ஸ்லாந்து மாநில கடற்கரைகளில் தற்காலிக தடுப்பூசி மையங்கள் அமைக்கப்படும்
  • விக்டோரியா மாநிலத்தில் 90 சதவீதமானோர் தடுப்பூசியை முழுமையாகப் போட்டதும் கட்டுப்பாட்டுகள் எப்படி தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது

விக்டோரியா

விக்டோரிய மாநிலத்தில் தடுப்பூசியை முழுமையாகப் போட்டவர்கள் எண்ணிக்கை 80 சதவீதத்தை அடுத்த வார இறுதியில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மாநிலம் முழுவதும் மக்கள் கட்டுப்பாடுகளின்றி அக்டோபர் 29ஆம் நாள் முதல் நடமாடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா மாநிலத்தில் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் தடுப்பூசியை முழுமையாகப் போட்டவர்கள் எண்ணிக்கை 90 சதவீதத்தை நவம்பர் மாதம் 24ஆம் தேதி எட்டும் என்று தான் எதிர்பார்ப்பதாக மாநில Premier Daniel Andrews கூறினார்.

அதன் பின்னர், எந்த வித கட்டுப்பாடுகளும் எங்கும் இருக்காது என்று அவர் மேலும் கூறினார்.

ஆனால், தடுப்பூசியை முழுமையாகப் போட்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.

மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,935 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் பதினொரு பேர் உயிரிழந்துள்ளார்கள்.

தடுப்பூசி எங்கே போடலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்


நியூ சவுத் வேல்ஸ்

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 292 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

NSW மாநிலத்தில் வாழ்பவர்களில் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 84 சதவீதமானோர் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுள்ளார்கள்.

மாநிலத்தில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க “Feel New South Wales” என்ற புதிய பிரச்சாரத்தை மாநில அரசு தொடங்கியுள்ளது.

தடுப்பூசி போட்டுக் கொள்ள இங்கே பதிவு செய்யலாம்.


குயின்ஸ்லாந்து

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம் புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.

Surf Lifesaving Queensland என்ற அமைப்புடன் இணைந்து, அடுத்த வார இறுதியில் குயின்ஸ்லாந்து மாநில கடற்கரைகளில் தற்காலிக தடுப்பூசி மையங்களை செயல்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தடுப்பூசி போட்டுக் கொள்ள இங்கே பதிவு செய்யலாம்.


கடந்த 24 மணி நேரத்தில்

  • ACTயில் சமூகப் பரவல் மூலம் புதிதாக ஒன்பது பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.
  • பூர்வீக குடி மக்களில் அனேகமானவர்கள் இன்னமும் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொள்ளவில்லை என்பதால், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வோம் என்று பொருள்பட “All of US” என்ற தலைப்பிலும், தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்த “Spread Freedom” என்ற தலைப்பிலும், விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை அரசு ஆரம்பித்துள்ளது.
  • நாட்டு மக்களில் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 86 சதவீதமானோர் தடுப்பூசியின் ஒரு சுற்றையும் 60 சதவீதமானோர் தடுப்பூசியை முழுமையாகவும் போட்டுள்ளார்கள்.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

NSW பயணம் குறித்த தரவுகள்  மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
VIC பயணம் குறித்த தரவுகள்வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.


 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

NSW 
Victoria 
Queensland 
South Australia 
ACT 
Western Australia 
Tasmania
Northern Territory 


மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

NSW 
Victoria 
Queensland 
South Australia 
ACT 
Western Australia 
Tasmania
Northern Territory


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 

This story is also available in other languages.