Coming Up Fri 8:00 PM  AEST
Coming Up Live in 
Live
Tamil radio

ஆஸ்திரேலியாவில் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!

Federal health minister Greg Hunt has said that Australia is expected to surpass 90 per cent single dose vaccination target by 1 PM today. Source: AAP Image/Mick Tsikas

கொரோனா வைரஸ் குறித்து நவம்பர் மாதம் 11ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

  • ஆஸ்திரேலியாவில்  முதலாவது சுற்று கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை இன்றையதினம் 90 சதவீதத்தை எட்டுவதால், இன்றையநாள் மிக முக்கியமான மைல்கல் எட்டப்படும் நாளாக பதிவாகிறது என சுகாதார அமைச்சர் Greg Hunt தெரிவித்தார். 
  • Moderna-வின் mRNA கோவிட்-19 தடுப்பூசியான SPIKEVAX-ஐ, 6-11 வயதுக்குட்பட்டவர்கள் போட்டுக்கொள்வதற்கான தற்காலிக ஒப்புதலை Therapeutic Goods Administration வழங்கியுள்ளது.
  • கோவிட் தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பதற்கான தொடர்புகளைக் கண்டறியமுடியாதுபோனால், Gold Coast-இல் மேலதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என குயின்ஸ்லாந்து Premier Annastacia Palaszczuk  தெரிவித்துள்ளார்.
  • ACT-இல் கோவிட் தொற்றுக்குள்ளான 33 பேர் கன்பராவில் இடம்பெற்ற சட்டவிரோத Halloween party-உடன் தொடர்புபடுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
  • டாஸ்மேனியாவிலுள்ள 80 சதவீதமானோர் கோவிட் தடுப்பூசியை முழுமையாக பெற்றுள்ளனர்.
  • ஆஸ்திரேலியாவுடனான எல்லைகளை Fiji மீண்டும் திறந்துள்ள அதேநேரம் Fiji கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள், சிறப்பு அனுமதி வைத்திருப்போர்(இவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்) மற்றும் நாடு திரும்பும் Fiji குடியிருப்பாளர்கள், டிசம்பர் 1ம் திகதி தொடக்கம் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடற்ற பயணத்தை மேற்கொள்ளமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,313 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 261 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக இருவருக்குத்  தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இவர்களில் ஒருவருக்கு தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது கண்டறியப்படவில்லை.


தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

NSW பயணம் குறித்த தரவுகள்  மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
VIC பயணம் குறித்த தரவுகள்வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

NSW 
Victoria 
Queensland 
South Australia 
ACT 
Western Australia 
Tasmania
Northern Territory 


மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

NSW 
Victoria 
Queensland 
South Australia 
ACT 
Western Australia 
Tasmania
Northern Territory


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

This story is also available in other languages.