கொரோனா வைரஸ் குறித்து டிசம்பர் மாதம் 30ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.
- கோவிட் தொற்றாளருடன் "நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள்-close contact" என்பதை மறுவரையறை செய்வதற்கும், கோவிட்-19 சோதனைக்கான நிலையான அணுகுமுறையைப் பற்றி விவாதிக்கவும், தேசிய அமைச்சரவை இன்று கூடுகிறது.
- விக்டோரியர்களுக்கு விரைவில் இலவச கோவிட்-19 rapid antigen testing kits கிடைக்கும் என்று விக்டோரியாவின் சுகாதார அமைச்சர் Martin Foley தெரிவித்துள்ளார். எனினும் இவை எவ்வாறு மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
- Torres Strait-இல் உள்ள Thursday தீவில் எட்டு புதிய கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
- உள்நாட்டுப் பயணிகள் தமது பயணத் தேவைக்காக PCR சோதனைகளை மேற்கொள்வதால், கோவிட் சோதனை மையங்களில் பாரிய நெருக்கடி ஏற்படும் எனத் தாம் முன்பே எச்சரித்ததாக நியூ சவுத் வேல்ஸில் உள்ள Pathology மையமொன்று தெரிவித்துள்ளது.
- Omicron திரிபானது Delta திரிபிலிருந்து பாதுகாப்பு வழங்கக்கூடும் என தென்னாப்பிரிக்காவின் டர்பனில் உள்ள Africa Health Research Institute-இன் ஆரம்பக்கட்ட ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமூகப்பரவல் ஊடாக புதிதாக 12,226 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.
விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 5,137 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 13 பேர் மரணமடைந்தனர்.
டாஸ்மேனிய மாநிலத்தில் புதிதாக 92 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 2,222 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
NSW பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
VIC பயணம் குறித்த தரவுகள், வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
NSW
Victoria
Queensland
South Australia
ACT
Western Australia
Tasmania
Northern Territory
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
NSW
Victoria
Queensland
South Australia
ACT
Western Australia
Tasmania
Northern Territory
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.