Coming Up Fri 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio

NSW மற்றும் Tasmania மாநிலங்களில் வீட்டிலேயே தனிமைப்படுத்தலாம்

Dr Rifi administers Covid vaccine to 12 year old at a pop-up drive through vaccination clinic at Belmore Oval, in Sydney, September 17, 2021. Source: AAP Image/Dan Himbrechts

கொரோனா வைரஸ் குறித்து செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்

  • தடுப்பூசியை முழுமையாகப் போட்டுள்ள பயணிகள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப் படலாம் என்று NSW அரசு அறிவித்தது
  • விக்டோரிய மாநிலத்தில் நள்ளிரவிலிருந்து சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.
  • ACT இல் முதியோர் பராமரிப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்படுகிறது
  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருக்கும் இன்னொருவருக்கு, சமூக பரவல் மூலம் தொற்று

 

நியூ சவுத் வேல்ஸ்

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,284 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் 12 பேர் இறந்துள்ளார்கள்.  இறந்தவர்களில் இரண்டு பேர் இருபது வயதுகளில்.  இரண்டு பேர் Dubboவிலுள்ள முதியோர் இல்லங்களில் வாழ்ந்தவர்கள்.  ஏழு பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை.

‘TGA அங்கீகாரம் பெற்ற COVID-19 தடுப்பூசியின் இரண்டு சுற்றுகளையும் போட்டுக் கொண்ட பயணிகள் ஏழு நாட்கள் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டிருத்தல்’ என்ற சோதனையைத் தொடங்கப் போவதாக NSW மாநில Premier Gladys Berejiklian அறிவித்தார். இந்த மாத இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் 175 பேர் இந்த சோதனையில் கலந்து கொள்வார்கள்.

தடுப்பூசி போட்டுக் கொள்ள இங்கே பதிவு செய்யலாம்.


 

விக்டோரியா

விக்டோரியா மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 510 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் ஒருவர் இறந்துள்ளார்.

தடுப்பூசி போடாதவர்கள் அல்லது ஒரு சுற்று மட்டுமே பெற்றவர்கள் தங்கள் வீட்டிலிருந்து 10 கிலோமீட்டருக்குள் ஒரு சுற்றுலா, நடை பயிற்சி போன்ற வெளிப்புற நடவடிக்கைகளுக்காக வெளியே செல்லலாம், அத்துடன் அவர்கள் வீட்டில் வசிக்காத இன்னொருவரை வெளி இடங்களில் சந்திக்கலாம்.

ஒரு வீட்டில் வாழும் அனைத்து பெரியவர்களும் தடுப்பூசியை முழுமையாகப் போட்டிருந்தால், அதே போன்ற இன்னொரு வீட்டவர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் சந்திக்கலாம்.  சந்திக்கும் போது ஆகக் கூடியது ஐந்து பேர் மட்டுமே ஒரே இடத்தில் கூட முடியும்.

நவம்பர் மாதம் வரை எப்படியான கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என்பதை, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 19ஆம் தேதி மாநில அரசு வெளியிடும்.

தடுப்பூசி எங்கே போடலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்.


 

Australian Capital Territory

ACTயில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 30 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  14 பேர் தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளனர்.

ACT இல் முதியோர் பராமரிப்பில் ஈடுபட்ட அனைவரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்பது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  முதியோர் பராமரிப்பில் ஈடுபட்டவர்கள் தடுப்பூசியின் ஒரு சுற்றையாவது போடவில்லை என்றால் வேலைக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தடுப்பூசி எங்கே போடலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்.


 

கடந்த 24 மணி நேரத்தில்

  • NSW மாநில பிராந்திய இடங்களிலிருந்து தடுப்பூசியின் இரண்டு சுற்றுகளையும் போட்டுக் கொண்டவர்கள் டாஸ்மேனியா சென்றால் அவர்களை அடுத்த 30 நாட்கள் வீட்டில் தனிமைப் படுத்தி வைத்திருக்கும் சோதனைத் திட்டம் அடுத்த வாரம் ஆரம்பிக்கிறது.

 

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

NSW பயணம் குறித்த தரவுகள்  மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
VIC பயணம் குறித்த தரவுகள்வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.


 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

NSW 
Victoria 
Queensland 
South Australia 
ACT 
Western Australia 
Tasmania
Northern Territory 


மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

NSW 
Victoria 
Queensland 
South Australia 
ACT 
Western Australia 
Tasmania
Northern Territory


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 

This story is also available in other languages.