Coming Up Mon 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio

NSW மாநிலத்தில் தடுப்பூசி போட்டவர்களுக்குக் Covid-19 கட்டுப்பாடு தளர்கிறது

NSW Premier Gladys Berejiklian arrives to speak to the media during a press conference in Sydney, Friday, September 10, 2021. Source: AAP Image/Joel Carrett

கொரோனா வைரஸ் குறித்து செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

  • NSW மாநிலத்தின் சில பிராந்திய இடங்களில் கழிவு நீரில் COVID-19 வைரஸ் கூறுகள்
  • விக்டோரிய மாநிலத்தில் V/Line இரயில் சேவைகளில் இடையூறு
  • ACTயில் மேலும் பலர் Covid தடுப்பூசி போட முடியும்
  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக ஒருவருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

 

நியூ சவுத் வேல்ஸ்

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,542 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் ஒன்பது பேர் இறந்துள்ளார்கள்.

தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்களுக்கு, எதிர்வரும் திங்கட்கிழமை, செப்டம்பர் 13ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.  தொற்று அதிகமாகப் பரவியுள்ள 12 உள்ளூராட்சிப் பகுதிகளுக்கு வெளியே வாழ்பவர்கள் ஐந்து பேர் வெளி இடங்களில் கூட முடியும்.  அந்தப் பகுதிகளில், ஒரே வீட்டில் வாழ்பவர்கள் இரண்டு மணி நேரம் வெளி இடங்களுக்குச் செல்லலாம்.  உடற்பயிற்சி செய்வதற்கான நேரக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.

NSW மாநிலத்தின் பிராந்திய இடங்களான Tamworth, Lightning Ridge, Glen Innes, Culburra Beach மற்றும் Moruya ஆகிய இடங்களில், கழிவு நீரில் COVID-19 வைரஸ் கூறுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

NSW மாநில சுகாதாரத் துறை ஒவ்வொரு நாளும் காலை 11 மணிக்கு வழங்கும் ஊடக அறிவிப்புகள் எதிர்வரும் திங்கட்கிழமை, செப்டம்பர் 13ஆம் தேதி முதல் நேரடியாக வழங்கப்பட மாட்டாது.  மாறாக இணைய வழியாக வழங்கப்படும்.

தடுப்பூசி போட்டுக் கொள்ள இங்கே பதிவு செய்யலாம்.


 

விக்டோரியா

விக்டோரியா மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 334 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றுள்ளவர்களில் 149 பேருக்குத் தொற்று எப்படி ஏற்பட்டது என்பது தெரியும்.  தொற்றினால் ஒருவர் இறந்துள்ளார்.

Southern Cross இரயில் நிலையத்திலிருந்து Gippsland வரை செல்லும் இரயில் வண்டியின் ஓட்டுனர் ஒருவருக்குத் தொற்று இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து, 20 V/Line சேவைகளில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த இடையூறு 100 சேவைகள் வரை பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

தடுப்பூசி எங்கே போடலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்.


 

Australian Capital Territory

ACT பிராந்தியத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 24 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்று கண்டவர்களில் 6 பேர் தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளனர்.

ACTயில் மேலதிகமாக 30,000 பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்றும் அதற்கு MyDHR தளத்தில் முன் பதிவை செய்யுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி எங்கே போடலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்.


 

கடந்த 24 மணி நேரத்தில்

  • குயின்ஸ்லாந்து மாநிலத்தின் பிரிஸ்பன் நகரின் Sunnybankஇலுள்ள Thomas More College என்ற பாடசாலைக்குச் செல்லும் பதின்ம வயது சிறுவன் ஒருவனுக்கு சமூகப் பரவல் மூலம் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

 

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

NSW பயணம் குறித்த தரவுகள்  மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
VIC பயணம் குறித்த தரவுகள்வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.


 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

NSW 
Victoria 
Queensland 
South Australia 
ACT 
Western Australia 
Tasmania
Northern Territory 


மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

NSW 
Victoria 
Queensland 
South Australia 
ACT 
Western Australia 
Tasmania
Northern Territory


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.