Coming Up Fri 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio

விக்டோரியாவில் 2,000+ தொற்றாளர்; NSWஇல் மேலும் தளர்வுகள் அறிமுகமாகின்றன

Having surpassed the 70 per cent double-dose vaccination milestone, visitors are seen at the reopening of the Sea Life Aquarium at Darling Harbour in Sydney. Source: AAP Image/DAN HIMBRECHTS

கொரோனா வைரஸ் குறித்து அக்டோபர் மாதம் 14ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

  • விக்டோரியா மாநிலத்தில் தொற்று கண்டவர்கள் எண்ணிக்கை இரண்டாயிரத்தைத் தாண்டியது
  • NSW மாநிலத்தில் வணிக நிறுவனங்களுக்கு மேலதிக சலுகைகள்
  • ஐந்து முதல் பதினொரு வயது சிறுவர்களுக்குத் தடுப்பூசி போடுவது குறித்து TGA பரிசீலிக்கிறது

விக்டோரியா

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 2,297 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளார்கள்.  மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள தொற்றாளர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொள்ளவில்லை.

மாநிலத்தில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்ட பின்னர், தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து அதிக கரிசனை கொள்ளத் தேவையில்லை என்று Premier Daniel Andrews கூறினார்.

எதிர்பார்த்ததை விட முன்னராகவே, இந்த இலக்கு அக்டோபர் 26ஆம் எட்டப்படலாம் என தற்போதைய கணிப்புகள் சொல்கின்றன.  ஆறாவது தடவையாக முடக்கநிலை கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்ட மாநிலத்தில் கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கப்படலாம்.

‘தொற்றாளர்களின் எண்ணிக்கையில் உச்சத்தைக் கண்டு விட்டோமா என்பதை, ஒரு வார காலத்திற்கான தரவுகளை மட்டும் வைத்து சொல்ல முடியாது,’ என்று Premier Daniel Andrews மேலும் கூறினார்.

தடுப்பூசி எங்கே போடலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்.


நியூ சவுத் வேல்ஸ்

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 406 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் ஆறு பேர் இறந்துள்ளார்கள்.

NSW மாநிலத்தவர்கள் உணவங்களில் மற்றும் பொழுது போக்கு இடங்களில் (2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்னர்) பயன்படுத்த மேலும் இரண்டு voucherகளை அரசு வழங்குகிறது.

‘வணிக நிறுவனங்கள் வழமை போல் செயல் படுவதையும் இலாபமீட்டுவதையும் நாம் விரும்புகிறோம்,’ என்று Premier Dominic Perrottet கூறினார்.

மாநிலத்தில் 91.1 சதவீதமானவர்கள் தடுப்பூசியின் ஒரு சுற்றையும் 76.5 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகவும் போட்டுக் கொண்டுள்ளார்கள்.

தடுப்பூசி போட்டுக் கொள்ள இங்கே பதிவு செய்யலாம்.


Australian Capital Territory

ACTயில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 46 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றுள்ளவர்களில் 30 பேருக்குத் தொற்று எங்கிருந்து வந்தது என்பது தெரியும்.

தடுப்பூசி எங்கே போடலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்.


கடந்த 24 மணி நேரத்தில்

  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.
  • பூர்வீக மக்களில் பலர் இன்னமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.  நாட்டிலுள்ள பூர்வீக மக்களில் 57.5 சதவீதமானவர்கள் தடுப்பூசியின் ஒரு சுற்றையும் 42 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகவும் போட்டுக் கொண்டுள்ளார்கள்.
  • ஐந்து முதல் பதினொரு வயது சிறுவர்களுக்குத் தடுப்பூசி போடலாம் என்று TGA மற்றும் ATAGI இரண்டும் அனுமதி வழங்கிய பின்னரே அந்த வயது சிறுவர்களுக்குத் தடுப்பூசி வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் Greg Huntகூறினார்.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

NSW பயணம் குறித்த தரவுகள்  மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
VIC பயணம் குறித்த தரவுகள்வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.


 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

NSW 
Victoria 
Queensland 
South Australia 
ACT 
Western Australia 
Tasmania
Northern Territory 


மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

NSW 
Victoria 
Queensland 
South Australia 
ACT 
Western Australia 
Tasmania
Northern Territory


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.