Coming Up Wed 8:00 PM  AEST
Coming Up Live in 
Live
Tamil radio

தடுப்பூசிகள் Omicron பரவலை நிறுத்துமா? கோவிட்-19 booster தடுப்பூசி பற்றிய தகவல்

The vaccine technology underlying the booster shots is the same as the first and second vaccine doses. Source: AAP

தடுப்பூசிகள் Omicron பரவலை நிறுத்துமா? தற்போதைய தடுப்பூசிகள் மற்றும் booster தடுப்பூசிகள் புதிய திரிபிற்கு எதிராக பாதுகாப்பை வழங்கக்கூடும் என்று பல நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

புதிய கோவிட்-19 திரிபான Omicron உலக நாடுகளில் பரவிவரும் பின்னணியில், ஏற்கனவே உள்ள கோவிட் தடுப்பூசிகள் மற்றும் booster தடுப்பூசிகள் இதற்கெதிரான பாதுகாப்பை வழங்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறு இல்லாதபட்சத்தில் ஏற்கனவே உள்ள தடுப்பூசிகளில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் Omicron திரிபுக்கெதிரான செயல்திறனை அதிகரிக்க முடியுமென கோவிட் தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தற்போதைய தடுப்பூசியை 100 நாட்களுக்குள் மாற்றியமைக்க முடியும் என்று Pfizer அறிவித்துள்ள அதேநேரம், அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் தமது தடுப்பூசியை மாற்றியமைக்க முடியும் என Moderna தெரிவித்துள்ளது.

Booster தடுப்பூசியை யார் பெறுவார்கள்?

ஆஸ்திரேலியாவின் கோவிட்-19 booster தடுப்பூசி நவம்பர் 8 முதல், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஒருவர் தனக்கான இரண்டாவது சுற்று கோவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதிலிருந்து 6 மாதங்கள் கழித்து booster தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம்.

ATAGI தற்போது 12 முதல் 17 வயதிற்குட்பட்டவர்களுக்கு booster தடுப்பூசியை பரிந்துரைக்கவில்லை.

People at the Boondall mass vaccination hub in Brisbane on 18 September 2021.
People at the Boondall mass vaccination hub in Brisbane on 18 September 2021.
AAP

எவ்வளவு விரைவாக நீங்கள் booster தடுப்பூசியைப் பெற வேண்டும்?

கடுமையான நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் தமக்கான இரண்டாவது சுற்று தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதிலிருந்து இரண்டு தொடக்கம் ஆறு மாதங்களுக்குள் மூன்றாவது சுற்று தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சில விதிவிலக்கான சூழ்நிலைகளில் இந்த இடைவெளி நான்கு வாரங்களாக குறைக்கப்படலாம்.

அதேநேரம் பொது மக்கள் குறிப்பாக, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் தமது இரண்டாவது சுற்று தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட பிறகு குறைந்தது ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

Booster தடுப்பூசி எவ்வாறு செயல்படுகிறது?

நாம் பெற்றுக்கொள்ளும் முதலாவது மற்றும் இரண்டாவது சுற்று கோவிட் தடுப்பூசியினது செயல்பாட்டையே booster தடுப்பூசிகளும் செய்கின்றன.

நோய்த்தொற்று மற்றும் வைரஸ் பரவல் ஆகியவற்றைத் தடுப்பதற்காக கோவிட் தடுப்பூசியிலிருந்து நாம் பெறும் பாதுகாப்பானது, இன்னும் வலுவானதாகவும் இன்னும் நீண்ட காலத்திற்கு நீடிப்பதாகவும் இருப்பதை booster தடுப்பூசி உறுதிப்படுத்தும்.

எந்த booster தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்?

ATAGI ஆலோசனையின்படி மூன்றாவது சுற்றாக Pfizer தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம். இது ஒரு mRNA தடுப்பூசி ஆகும். ஒரு நபர் தனது முதன்மையான தடுப்பூசியாக எதனைப் போட்டுக்கொண்டார் என்பது பொருட்டல்ல.

Therapeutic Goods Administration-இன் ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளதால்  Moderna உள்ளிட்ட பிற தடுப்பூசிகளும் booster தடுப்பூசி பட்டியலில் சேர்க்கப்படும் என அரசு எதிர்பார்க்கிறது.

A healthcare worker speaks to a patient after administering a Covid19 vaccination at a pop-up vaccination van in Epping, Melbourne.
A healthcare worker speaks to a patient after administering a Covid19 vaccination at a pop-up vaccination van in Epping, Melbourne.
AAP

நான் எப்படி முன்பதிவு செய்ய வேண்டும்?

தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளத் தகுதியானவர்கள் மருத்துவர் மூலம் முன்பதிவுகளை மேற்கொள்ளலாம்.

அரசின் Vaccine Clinic Finder இணையதளத்தில் நீங்கள் முன்பதிவு செய்யலாம்.

Booster தடுப்பூசி எந்தளவு பயனுள்ளதாக இருக்கும்?

தற்போதைய தடுப்பூசிகள் Omicron திரிபிற்கு எதிராக பாதுகாப்பை வழங்குகின்றனவா இல்லையா என்பதைக் கண்டறிவதற்கான ஆய்வுகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும் Delta திரிபைப் பொறுத்தவரை, கோவிட் தடுப்பூசிகள் சிறந்தமுறையில் செயற்பட்டதுடன்,  மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் இறப்பு ஆகியவற்றிற்கு எதிராக அதிக அளவிலான பாதுகாப்பை வழங்கின.

ஏதேனும் அபாயங்கள் அல்லது பக்க விளைவுகள் உள்ளனவா?

Booster தடுப்பூசிகள் முந்தைய சுற்றுக்களில் பயன்படுத்தப்பட்ட அதே தடுப்பூசிகள் என்பதால், பக்க விளைவுகள் தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைவருக்கும் போதுமான booster தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளனவா?

ஆஸ்திரேலியா booster தடுப்பூசிகளை வழங்க நன்கு தயாராக உள்ளது என சுகாதார அமைச்சர் Greg Hunt கடந்த அக்டோபரில் தெரிவித்திருந்தார்.

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

NSW பயணம் குறித்த தரவுகள்  மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
VIC பயணம் குறித்த தரவுகள்வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

NSW 
Victoria 
Queensland 
South Australia 
ACT 
Western Australia 
Tasmania
Northern Territory 


மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

NSW 
Victoria 
Queensland 
South Australia 
ACT 
Western Australia 
Tasmania
Northern Territory


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

This story is also available in other languages.