SBS Radio App

Download the FREE SBS Radio App for a better listening experience

Advertisement
SBS Tamil (SBS Tamil)

அம்பி அவர்களை அறியாதவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு புதியவர்கள். அம்பி அவர்கள் ஆஸ்திரேலிய தமிழ் சமூகத்திற்கு செய்த பங்களிப்பு மிகப் பெரிது. அவர் பெற்ற விருதுகளும், பாராட்டுகளும் ஏராளம். குறிப்பாக, இரண்டாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் 'அண்ணா பதக்கத்திற்காக' கவிதைப்போட்டி நடைபெற்று எம்ஜிஆர் அவர்கள் தங்கப்பதக்கம் அளித்த பத்து கவிஞர்களில் அம்பி அவர்களும் ஒருவர். அம்பி அவர்கள் 10 கவிதை நூல்கள், கிரீன் அவர்களைப்பற்றி மூன்று நூற்களை எழுதியுள்ளார். 30 ஆண்டுகள் ஆசிரியப்பணி, பின்னர் பாடவிதான எழுத்தாளர் என்று அவரின் பணி விரிகிறது. பாப்புவா நியு கினியில் College of Distance Education நிறுவனத்தில் Head of Mathematics Department யாக இருந்ததை பெருமையுடன் நினைவு கூர்கிறார். ஆஸ்திரேலிய தமிழ் சமூகம் நன்கறிந்த அம்பி அவர்களை SBS தமிழ் ஒலிபரப்பிற்காக சந்திக்கிறார் றைசெல்.  

By
Raymond Selvaraj
Published on
Friday, October 16, 2015 - 21:33
File size
7 MB
Duration
15 min 13 sec