இந்த வருட Order of Australia விருதுகள் பெறும் தமிழர்கள் !

இந்த வருடம், இரண்டு தமிழர்கள் Order of Australia விருதுகள் பெறுகிறார்கள். அணு மருத்துவம் மற்றும் உயிரியல், தொழில் நிறுவனங்கள், மற்றும் சமூகத்திற்கு துறைகளில் உள்ள மருத்துவ ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க சேவை; மற்றும் சமூக சேவை அறியமைக்காக AM விருது பெறுகிறார் பேராசிரியர் விஜய் குமார். பல் கலாச்சார, மற்றும் சமூக சேவைக்காக OAM விருது பெறுகிறார் செல்வி பத்மினி செபாஸ்டியன்.

Prof Vijay Kumar

Source: Prof Vijay Kumar

Imageபேராசிரியர் விஜய் குமார்

அணு மருத்துவம் மற்றும் உயிரியல், தொழில் நிறுவனங்கள், மற்றும் சமூகத்திற்கு துறைகளில் உள்ள மருத்துவ ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க சேவை; மற்றும் சமூக சேவை அறியமைக்காக AM விருது.

முக்கியமாக:

  • 1996 ம் ஆண்டு முதல், வெஸ்ட்மீட் மருத்துவமனை, மற்றும் வெஸ்ட்மீட் குழந்தைகள் மருத்துவமனையின் Radiopharmaceutical Science துறையின் தலைவர் மற்றும் விஞ்ஞான முதல்வர்.
  • 2011 முதல் சிட்னி பல்கலைக்கழக, மருத்துவ பள்ளியின் குழந்தை மற்றும் இளம்வயது சுகாதார மருத்துவ பேராசிரியர்.
  • அணு மருத்துவம் மற்றும் உயிரியல் உலக கூட்டமைப்பு குழுவின் செயலாளர், 2008-2014; மற்றும் பொருளாளர், 2014-2018.
  • ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணு மருத்துவ சமூகத்தின் தலைவர், 2014-2016.
  • 2013 முதல், அறிவியல் ஆலோசனைக் குழு உறுப்பினர்.
  • 2009 ஆம் ஆண்டு முதல், சர்வதேச உறவுகள் குழுவின் செயலாளர்.
  • சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA), ஐக்கிய நாடுகள், வியன்னா:
      •       2005 ஆம் ஆண்டு முதல் ஆலோசகர், அறிவியல் நிபுணர்.
      •       முழு நேரஆலோசகர், அணு அறிவியல் பயன்பாடுகள் பிரிவு, 2010.
  • 2010 பிராந்திய ஆப்பிரிக்க மாநாட்டின் அறிவியல் செயலாளர், சர்வதேச அணுசக்தி அமைப்பு
  • சர்வதேச அணுசக்தி அமைப்பின் iPET-இரண்டாம் மாநாடு, வியன்னா, 2011 ஏற்பாட்டு மத்திய குழு உறுப்பினர்.
  • அணு மருத்துவத்தின் எதிர்கால போக்குகளை நிறுவுவதற்கான சர்வதேச அணுசக்தி அமைப்பு, வியன்னா, மத்திய குழு உறுப்பினர், 2010.
  • 2006ம் ஆண்டு சியோல், தென் கொரியாவில் நடைபெற்ற அணு மருத்துவம் மற்றும் உயிரியல் குறித்த சர்வதேச மாநாட்டின் சிறப்புக் குழு தலைவர்.
  • 2010ம் ஆண்டு கேப் டவுன், தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற அணு மருத்துவம் மற்றும் உயிரியல் குறித்த சர்வதேச மாநாட்டின் சிறப்புக் குழு தலைவர்.
  • 2011ம் ஆண்டு முதல் International Society of Radiolabelled Blood Elements பணிப்பாளர் சபை உறுப்பினர்
  • 2008ம் ஆண்டு முதல் World Journal of Nuclear Medicine and Biology ஆசிரியர் குழு உறுப்பினர்.
  • United Indian Association அமைப்பின் துணைத் தலைவர் 2005-2009.
  • சிட்னி தமிழ் சங்கம் சங்கம் 1978ம் ஆண்டு உருவானபோது ஆரம்ப உறுப்பினர்.

இவர் பெற்ற விருதுகளும் அங்கீகாரங்களும்:

  • ஆஸ்திரேலிய அணு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பின் விருது, 2007 மற்றும் 2014.
  • இந்திய அணு மருத்துவம் சங்கம், 2011ல் வழங்கிய அணு மருத்துவ வாழ்நாள் சாதனையாளர் விருது.

பேராசிரியர் விஜய் குமார் எமக்களித்த நேர்காணலை 27 ஜனவரி, வெள்ளிக்கிழமை, எமது ஒலிபரப்பில் கேட்கலாம்.

 

Padmini Sebastian
Source: Padmini Sebastian

செல்வி பத்மினி செபாஸ்டியன்

பல் கலாச்சார, மற்றும் சமூக சேவைக்காக OAM விருது.

முக்கியமாக:

  • 2003ம் ஆண்டிலிருந்து, விக்டோரிய மாநில குடிவரவு அருங்காட்சியக மேலாளர்; அருங்காட்சியக இயக்குனர், 2001-2003 மற்றும், பொது நிகழ்ச்சிகள் மேலாளர், 1997-2001.
  • 2006ம் ஆண்டு முதல், International Network of Migration Institutions, UNESCO அமைப்பின் நிறுவன உறுப்பினர்.
  • ஆஸ்திரேலியா இஸ்லாமிய அருங்காட்சியகத்தின் ஆலோசனை குழு உறுப்பினர், 2011-2014.
  • தாஸ்மானிய மாநில Zootango திரையரங்கு நிறுவனத்தின் பொது மேலாளர், 1995-1997.
  • 2013ம் ஆண்டு முதல் மெல்போர்ன் நகரம் வழங்கும் மெல்போர்ன் நகர விருதுகளிற்கான நீதிபதி.
  • 2011ம் ஆண்டு முதல் விக்டோரிய மாநில பெண்கள் அறக்கட்டளைப் பணிப்பாளர், மற்றும் The Dugdale Trust for Women and Girls அறக்கட்டளை உறுப்பினர்.
  • 2011ம் ஆண்டு முதல் Deakin பல்கலைக்கழக, Alfred Deakin Institute for Citizenship and Globalisation Advisory Board உறுப்பினர்.
  • 2011ம் ஆண்டு முதல் Centre for Multicultural Youth, இளைஞர் வழிகாட்டி.
  • Maribyrnong Migrant Hostel தொண்டர் 1984-1985.

இவர் பெற்ற விருதுகளும் அங்கீகாரங்களும்:

  • சர்ச்சில் பெல்லோஷிப் பெறுநர், 2000.

செல்வி பத்மினி செபாஸ்டியன் எமக்களித்த நேர்காணலை 29 ஜனவரி, ஞாயிற்றுக்கிழமை, எமது ஒலிபரப்பில் கேட்கலாம்.


2 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now