கடந்தவருடம் நடைபெற்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்களில் வீட்டில் தமிழ் பேசுவதாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட 73,180 பேரில் அதிகளவானோர் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வாழ்கிறார்கள்.
இதில் அதிகளவு தமிழ்பேசுவோரைக் கொண்ட suburb-ஆக Westmead காணப்படுகின்றது. இங்கே 1425 பேர் வீட்டில் தமிழ் பேசுகின்றனர். இரண்டாமிடத்தில் 1404 பேருடன் Toongabbie-உம், மூன்றாமிடத்தில் 1307 பேருடன் Wentworthville-உம் காணப்படுகின்றது.
அதேநேரம் விக்டோரியா மாநிலத்தில் Dandenong-இல் 1389 பேரும் Glenwaverly-இல் 1127 பேரும் வீட்டில் தமிழ் பேசுகின்றனர்.
கீழுள்ள வரைபடத்தைப் பயன்படுத்தி நீங்கள் வாழும் பகுதிகளில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.