விக்டோரியா மாநில கிரீன்ஸ் கட்சித் தலைவராக Dr.சமந்தா ரட்ணம் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் Dr Richard Di Natale அறிவித்துள்ளார்.
இலங்கைப் பின்னணி கொண்ட தமிழ்ப்பெண்ணான சமந்தா, போர் காரணமாக பெற்றோருடன் 1989ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்ந்த நிலையில், கிறீன்ஸ் கட்சியின் சார்பில், 2012ம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு உள்ளூராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Moreland City Council-இன் முன்னாள் மேயரான சமந்தா 2016 ஜுலை 2ம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டிருந்தார்.
Asylum Seeker Resource Centre-இல் செயற்றிட்ட முகாமையாளர், மேயர், councillor, சமூக சேவகர் என பல பரிமாணங்களில் தனது திறமையை நிரூபித்துள்ள சமந்தா ரட்ணம், இப்புதிய பதவியிலும் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்வார் என Dr Richard Di Natale தெரிவித்தார்.
விக்டோரியா மாநில கிரீன்ஸ் கட்சியின் துணைத் தலைவராக Nina Springle தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்: