தமிழைப் பரப்பும் சீன கவிஞர் யூசி
SBS Tamil Source: SBS Tamil
கவிஞர் யூசி தைவான் நாட்டைச் சேர்ந்த உலகக் கவிஞர். இவர் திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் கவிதைகள், ஆத்திசூடி ஆகியவற்றை சீன மொழியில் மொழிபெயர்த்தவர். தமிழக அரசின் 2014 ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதை பெற்ற முதல் அயல் நாட்டுக் கவிஞர் இவர். கவிஞர் யூசியுடன் நேர்காணல். இந்த நேர்காணலை ஒழுங்கமைக்க உதவிய தைவான் தமிழ்ச்சங்கத்தைச் சார்ந்த அருள் வேலு பாலாசி, கவிஞர் யூசி குறித்த கருத்துகளையும் பகிர்ந்து கொள்கிறார். கவிஞர் யூசியை சீன மொழியில் நேர்காண உதவியவர் SBS Mandarin ஒலிபரப்பின் நிறைவேற்றுத் தயாரிப்பாளர் Zhou Li. மொழிபெயர்க்க உதவியவர் William Shi. நிகழ்ச்சித் தயாரிப்பு குலசேகரம் சஞ்சயன். மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு நினைவேந்தல் கவிதை : http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/article/2016/01/03/felicitation-abdul-kalam-poet-yu-hsi?language=ta தமிழ் மேல் காதல் கொண்டவர் கவிஞர் யூசி: http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/tmilll-meel-kaatl-konnttvr-kvinyr-yuuci?language=ta
Share