SKIP TO MAIN CONTENT

12 மணிநேரங்களுக்குள் 1லட்சம் டொலர்களுக்கு மேல் நன்கொடை சேர்ந்தது!

Public domain
Source: #putthembackup

1 min read

Published

Presented by Renuka.T

Source: ABC Australia



Skip to article content

எதிர்வரும் 26ம் திகதி ஆஸ்திரேலிய தினத்தைக் கொண்டாடும் நோக்கில், மெல்பேர்ன் வீதியில் வைக்கப்பட்ட இரு முஸ்லிம் பெண்களின் புகைப்படம் தாங்கிய விளம்பரப் பலகையொன்றுக்கு எழுந்த பலத்த எதிர்ப்பினையடுத்து, அவ்விளம்பரப் பலகை குறித்த இடத்திலிருந்து அண்மையில் நீக்கப்பட்டது.

Hijab அணிந்த இரு பெண்களின் புகைப்படத்தை ஆஸ்திரேலிய தின அடையாளமாக வெளியிடுவது “un-Australian” என far right social media குழுவைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

qms
Source: qms

இதைத்தொடர்ந்து அந்த விளம்பரப்பலகையை அமைத்திருந்த QMS  நிறுவனத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலையடுத்து, அதனை நீக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டதாக, விக்டோரிய பல்கலாச்சார அலுவல்கள் அமைச்சர் Robin Scott கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.

ஆனால் இப்படியான அச்சுறுத்தல்களுக்கு அடிபணிவதன் மூலம் ஆஸ்திரேலியா தனது பல்கலாச்சாரத் தன்மையை இழந்துவிடக்கூடாது எனத் தீர்மானித்த Dee Madigan என்ற பெண், அகற்றப்பட்ட விளம்பரப்பலகையை மீண்டும் வைப்பதற்குத் தேவையான பணத்தைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.

சுமார் 20 ஆயிரம் டொலர்களை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தநிதிசேகரிப்பிற்கு, 12 மணிநேரத்திற்குள் 1 லட்சம் டொலர்களுக்கு மேல் நன்கொடை வழங்கி ஆஸ்திரேலியர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இதையடுத்து நாடு முழுவதும் குறித்த விளம்பரப்பலகையை வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் நிதிசேகரிப்பு தொடர்வதாகவும் Dee Madigan தெரிவித்துள்ளார்.

 


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now