ஆஸ்திரேலிய மக்கள் 2016 நிதியாண்டில் இடம்பெற்ற கடனட்டை மோசடிகளில், சுமார் 521 மில்லியன் டொலர்களை இழந்துள்ளதாக Australian Payments Clearing Association வெளியிட்டுள்ள புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.
இந்த நிதியாண்டில் கடனட்டை மூலம் மொத்தமாக 703 பில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ள நிலையில், இதன் 0.07 வீதம் மோசடிக்காரர்களால் களவாடப்பட்டுள்ளது.
களவாடப்பட்ட கடனட்டை விபரங்களைக் கொண்டு இணையம் மூலம் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இதன் ஊடாகவே பெரும்பாலான மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும், Australian Payments Clearing Association தெரிவித்துள்ளது.
கடனட்டை மோசடிகளிலிருந்து தப்பிப்பதற்கு வாடிக்கையாளர்கள் நம்பத்தகுந்த இணையங்களில் மட்டும் கடனட்டைகளைப் பயன்படுத்தும் அதேநேரம் தமது கணணிகளின் security software சரியாக செயற்படுகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் Australian Payments Clearing Association அறிவுறுத்தியுள்ளது.
Share
