SKIP TO MAIN CONTENT

28 ஆயிரம் அகதி விண்ணப்பங்கள் தொடர்பில் அரசு பதில்

AAP
Source: AAP

3 min read

Published

Updated

Presented by Renuka.T



Skip to article content

லேபர் ஆட்சியின் போது ஆஸ்திரேலியாவுக்குள் பிரவேசித்த சுமார் 28 ஆயிரம் பேரின் தஞ்சக்கோரிக்கை விண்ணப்பங்கள் இன்னமும் பரிசீலிக்கப்படாத நிலையில் இருப்பதை அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

லேபர் ஆட்சிக்காலத்தில் நாட்டுக்குள் பிரவேசித்த 30 ஆயிரம் புகலிடக்கோரிக்கையாளர்களில் 28 ஆயிரம் பேர் இன்னமும் நாட்டிலேயே தங்கியிருப்பதாகவும் 1,700 பேர் தாமாக முன்வந்தோ அல்லது வலுக்கட்டாயமாகவோ அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக குடிவரவுத் திணைக்களத்தின் புள்ளிவபரங்கள் தெரிவிக்கின்றன.  

இந்த நிலையில் சுமார் 28,290 புகலிடக்கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் இன்னமும் பரிசீலிக்கப்படாமல் இருப்பதை ஒப்புக் கொண்டுள்ள குடிவரவு அமைச்சர் பீட்டர் டட்டன் இந்த தாமதத்திற்கு முன்னாள் லேபர் அரசே காரணம் என குற்றம்சாட்டினார்.

மேலும் லேபர் அரசின் இந்தத் தவறைச் சரிசெய்வதற்கு பத்தாண்டுகளுக்கு மேல் எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இக்குற்றச்சாட்டை ஏற்க மறுத்துள்ள லேபர் கட்சியின் குடிவரவுப் பேச்சாளர் ரிச்சர்ட் மார்ல்ஸ், புகலிடக்கோரிக்கையாளர் விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை தற்போது இரண்டு மடங்கு தாமதமாக நடைபெறுவதாகவும் இதற்கு குடிவரவு அமைச்சர் பீட்டர் டட்டன் விளக்கம் சொல்ல வேண்டுமெனவும்  தெரிவித்தார்.

இதேவேளை 12 ஆயிரம் சிரியா மற்றும் ஈராக் புகலிடக்கோரிக்கையாளர்களை உள்வாங்குவதாக ஆஸ்திரேலிய அரசு வாக்குறுதியளித்திருந்த போதிலும் இதுவரை 187 பேரே இவ்வாறு குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதனைச் சுட்டிக்காட்டியுள்ள லேபர் கட்சி, தற்போதைய அரசு அகதிகள் விடயத்தில் வேண்டுமென்றே காலத்தை இழுத்தடிப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.

Federal politicians have swapped barbs on immigration as the Turnbull Government confirms tens of thousands of asylum seekers who arrived under the former Labor government remain unprocessed.

Immigration Minister Peter Dutton confirmed that of the 30,000 asylum seeker legacy cases that arrived in Australia under Labor, more than 28,000 remain in the country.

Figures from the Department of Immigration and Border Protection indicate that 28,290 people are yet to have their cases processed, while about 1,700 have been forced to leave or have left voluntarily.

Mr Dutton blamed the former Labor government for the backlog and told News Corp it would take more than a decade "to clean up".

But the Opposition's Immigration spokesperson, Richard Marles, has pushed the blame back on the Government, describing Mr Dutton as "a dangerous combination of inefficiency and incompetence".

In a statement, Mr Marles said there had been a spike in waiting times under the Coalition — more than double the processing time under Labor.

"Peter Dutton should explain why people are spending longer in detention now than under Scott Morrison or Labor," he said.

The figures have emerged amid criticism of the Government's handling of the Syrian and Iraqi refugee resettlement program.

The latest figures, confirmed last week, stated that 187 refugees had been resettled in Australia as part of the Coalition's pledge to take in 12,000 people left displaced by violence in Syria and Iraq.

The process — initiated by former prime minister Tony Abbott last year — has come under fire in comparison to countries such as Canada, which has resettled more than 26,000 refugees in the same period.

Labor senator Lisa Singh suggested last night the Government was deliberately stalling the program because it was unpopular among voters, and she labelled the process "embarrassing".

"I really don't see what the delay is, other than perhaps a political delay, as to why we can't play our part," she said.

"We are the only Western country that has only settled such a tiny amount."


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now