பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான டொயோட்டா, உலகம் முழுவதுமுள்ள 3 லட்சத்து 40 ஆயிரம் Prius கார்களைத் திருத்த வேலைக்காக மீளப்பெறுவதாக அறிவித்துள்ளது.
குறித்த வகை கார்களின் பிரேக்கில் கோளாறு இருப்பதாக முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 2015 முதல் அக்டோபர் 2016 க்கிடையில் தயாரிக்கப்பட்ட Prius கார்களிலேயே இப்பழுது இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு திருத்த வேலைகளுக்காக திரும்பப்பெறப்படும் கார்களில் ஆஸ்திரேலியாவிலுள்ள 300 Prius கார்களும் அடங்குகின்றன.
குறித்த கார்களின் பிரேக்குகளிலுள்ள கோளாறு இலவசமாகத் திருத்திக் கொடுக்கப்படுமெனவும், கார் உரிமையாளர்கள் தமக்கு விருப்பமான டொயோட்டா முகவரைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் டொயோட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
