4 படகுகளில் வந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் டார்வினில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையுமில்லை என குடிவரவு அமைச்சர் Peter Dutton மறுத்துள்ளார்.
சிறுவர்கள் உட்பட 4 படகுகளில் வந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் டார்வினில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தமக்கு வந்திருப்பதாக, Darwin Asylum Seeker Support and Advocacy Network இன்று காலை அவர்களது Twitter பக்கத்தில் தெரிவித்ததையடுத்து , இச்செய்தி நாடெங்கும் பரவியது.
எனினும் இதனை மறுத்துள்ள குடிவரவு அமைச்சர் Peter Dutton, டார்வின் பிராந்தியத்தில் சட்டவிரோத மீன்பிடி தொடர்பிலான நடவடிக்கை ஒன்றில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும், அது புகலிடக்கோரிக்கையாளர் சம்பந்தப்பட்டது அல்லவென்றும் கூறியுள்ளார்.
மேலும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் உறுதிப்படுத்தப்படாத செய்திகளை வெளியிடக்கூடாது என்பதற்கு, இது ஒரு நல்ல உதாரணம் என்றும் குடிவரவு அமைச்சர் Peter Dutton சுட்டிக்காட்டியுள்ளார்.
Share
