SKIP TO MAIN CONTENT

5 வயதுச் சிறுவனின் உடல் ஆற்றிலிருந்து மீட்பு:கொலைக்குற்றச்சாட்டில் சிறுவனின் தாயார் கைது!

AAP
Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka.T

Source: ABC Australia



Skip to article content

நியூ சவுத் வேல்ஸ் மாநிலம், Moama பகுதியில் Murray ஆற்றிலிருந்து 5 வயதுச் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ள அதேநேரம், இச்சிறுவனின் தாயார் கொலைக்குற்றச்சாட்டின் பேரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை 27 வயதுப் பெண் தனது 9 வயது மற்றும் 5 வயது மகன்களுடன் ஆற்றுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.

அப்போது தனது 9 வயது மகனை நீரினுள் மூழ்கடித்துக் கொல்வதற்குத் தயார் முயன்றதாகவும் ஆனால் அச்சிறுவன் தப்பித்து ஓடியதாகவும், அவ்வாறு ஓடும்போது நாய்க்கடிக்கு உள்ளான சிறுவன், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அதேநேரம் சம்பவம் நடைபெற்ற தினம் 5 வயதுச் சிறுவன் ஆற்றில் காணாமல் போயிருந்த நிலையில், இன்று அச்சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தனது மகன்களை நீரில் மூழ்கடிக்க வேண்டியிருந்தது என்று அந்தப்பெண் கூறியதைக் கேட்டதாக சிலர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ள நிலையில், தனது மூத்த மகனைக் கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் அவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த பெண் நாளை மறுதினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

 


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now