SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய நிதிநிலை அறிக்கை 2016: முக்கிய தகவல்கள்

sbs
Source: SBS

4 min read

Published

Updated

Presented by Renuka.T



Skip to article content

சிறு வியாபார நிறுவனங்களுக்கு வரிச்சலுகை!

ஒரு வியாபார நிறுவனம் 10 million dollars க்கும் குறைவாக ஆண்டு வருமானம் ஈட்டினால் அந்த நிறுவனத்திற்கான வரி 28.5 சதத்திலிருந்து 27.5 சதமாக குறைக்கப்படும் என்று நாட்டின் கருவூலக் காப்பாளர் Treasurer Scott Morrison நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை வழி அறிவித்தார்.

AAP
Source: AAP

மேலும் வரி ஒழுங்காக செலுத்தாமல் சாக்குபோக்கு காட்டி தப்பித்துக்கொள்ளும் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் பெரும் பணக்காரர்களை கிடுக்கிப்பிடிபோட்டு மடக்கும் வகையில் Australian Taxation Office taskforce எனும் அமைப்பு நிறுவப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

பலருக்கு வரிச் சலுகை!

ஒருவர் தற்போது $80,000 டாலர் வரை வருமானம் ஈட்டும்போது செலுத்தும் வரி அவர் அதற்கு மேல் வருமானம் ஈட்டும்போது கூடுகிறது. ஆனால் அப்படியானவர்கள் இனி $87,000 டாலர் வரை வருமானம் ஈட்டும்போது செலுத்தும் வரி ஒரே வரியாக இருக்கும் என்றும், அவர் $87,000 டாலருக்கு மேல் வருமானம் ஈட்டினால் மட்டுமே அடுத்த வரி அளவுக்கு அவர் மீது வரி விதிக்கப்படும் என்றும் நாட்டின் கருவூலக் காப்பாளர் Treasurer Scott Morrison நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை வழி அறிவித்தார்.

AAP
Source: AAP

இதன்மூலம் 500,000 பேர்வரை வரிச்சலுகை பெறுவர். வரிச்சலுகை பெறும் negative gearing திட்டத்தில் அரசு கைவைக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆஸ்திரேலிய கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) கட்டணம் உயர்கிறது.

தற்போது ஆஸ்திரேலிய பாஸ்போர்ட் பெற ஒருவர் $254 செலுத்தவேண்டியுள்ளது. ஆனால் அந்த கட்டணம் $20 டாலர் உயர்த்தப்பட்டு $274 ஆக உயர்த்தப்படுகிறது. குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கட்டணத்தில் 10 டாலர் உயர்த்தப்பட்டு, அது 147 ஆக உயர்கிறது.

AAP
Source: AAP

இதன்மூலம் அரசுக்கு வரும் நான்கு ஆண்டுகளில் $172.9 million டாலர் அதிக வருமானம் கிடைக்கும்.

சிகரட் பாக்கெட்டின் விலை $40 ஆக உயரக்கூடும்!

சிகரட் மீது அரசு 12.5 சதம் புதிய வரி விதிக்கிறது. இதன்மூலம் அடுத்த ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 2020 ஆம் ஆண்டுவரை வரி உயர்ந்து 2020 ஆம் ஆண்டு ஒரு பாக்கெட் சிகரெட் விலை $40 ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

AAP
Source: AAP

அதுபோல் Duty Free கடைகளில் தற்போது Duty இல்லாமல் 50 சிகரட்கள் வாங்கலாம் என்றிருப்பதை மாற்றி இனி 25 சிகரெட் மட்டுமே இப்படி வாங்க முடியும் எனும் புதிய நடைமுறையையும் அரசு அறிமுகம் செய்யவுள்ளது.

ஆங்கிலத்தைத் தவிர பிற மொழிகளைக் கற்க அரசு உதவி அதிகரிப்பு!

பிற மொழிகளை மாணவர்கள் கல்விக்கூடங்களில் கற்க அரசு அதிக நிதி உதவி செய்ய முன்வந்துள்ளது. இதற்கான அறிவிப்பை நாட்டின் கருவூலக் காப்பாளர் Treasurer Scott Morrison நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை வழி அறிவித்தார். இதன்படி நகர்புறம் சாராத மாணவர்கள் ஆங்கிலம் தவிர்ந்த பிற மொழிகளைக் கற்க அரசு எதிர்வரும் இரு ஆண்டுகளில் $5.9 million டாலர் செலவிடும்.

சமூக பொருளாதரத்தில் பின்தங்கியுள்ள பகுதிகளில் இயங்கும் சுமார் 1000 preschool service நிலையங்களின் மேம்பாட்டு திட்டத்திற்கு மொபைல் உபகரணம் வாங்க ஒவ்வொரு மையத்திற்கும் அரசு தலா $500 செலவிட திட்டமிட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களின் கல்விக்கட்டணம் உயர்த்தப்படாது!

AAP
Source: AAP

பல்கலைக் கழக மாணவர்களின் கல்விக்கட்டணத்தை உயர்த்துவது எனும் முந்தைய பிரதமர் Tony Abbott இன் திட்டத்தை கைவிட அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி பல்கலைக் கழக மாணவர்களின் கல்விக்கட்டணம் உயர்த்தப்படாது என்று நாட்டின் கருவூலக் காப்பாளர் Treasurer Scott Morrison நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை வழி அறிவித்தார்.

Disability Support Pension கொடுப்பனவு மறு பரிசீலனை!

Centrelink வழங்கும் Disability Support Pension பெறுகின்றவர்களில் 30,000 பேரின் கொடுப்பனவுகளை மறு பரிசீலனைக்கு உட்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. Disability Support Pension பெறும் இவர்கள் இந்த கொடுப்பனவு பெற தகுதி உடையவர்களா என்று கண்டறிந்து பலரை இந்த கொடுப்பனவு திட்டத்திலிருந்து வெளியேற்றி அதன்மூலம் $62 மில்லியன் டாலர் சேமிக்க அரசு திடமிட்டுள்ளது.

A 'try, test and learn' fund costing $96 million will be set up for those on long-term welfare. (AAP)
A 'try, test and learn' fund costing $96 million will be set up for those on long-term welfare. (AAP) Source: AAP

மேலும் Centrelink வழங்கும் கொடுப்பனவுகளை இனி புதிதாக பெற இருக்கின்றவர்களுக்கு carbon tax compensation எனும் $14 உதவியை அரசு வழங்காது என்றும், இதற்குப் பதிலாக இவர்களின் இருவார கொடுப்பனவான $14 ஐ அரசு National Disability Insurance Scheme திட்டத்திற்கு பயன்படுத்தும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எளிதில் விசா!

சுற்றுலாப் பயண விசா விரைவாகக் கிடைக்க user-pays visa fast-track service எனும் திட்டத்தை அரசு அறிமுகம் செய்கிறது. இதன்மூலம் இந்தியா, United Arab Emirates போன்ற நாடுகளிலிருந்து வருகின்றவர்கள் பயன் பெறுவர். இதற்காக இவர்கள் அதிக கட்டணம் செலுத்தவேண்டி வரலாம். இதன் மூலம் அரசு எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் $1.5 million டாலர் வருமானம் ஈட்டும் என்றும்,  பயணிகளே விசா முறையை தெரிந்துகொள்ளும் வகையில் நவீன திட்டத்தை அரசு அறிமுகம் செய்வதன்மூலம், அரசுக்கு $180 million டாலர் சேமிக்க முடியும் என்றும் நாட்டின் கருவூலக் காப்பாளர் Treasurer Scott Morrison நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை வழி அறிவித்தார்.

Visa
Source: SBS

மேலும் இந்தியா, சீனா, தாய்லாந்து, வியட்நாம், சிலி நாடுகளிலிருந்து வரும் பயணிகளில் சிக்கலை ஏற்படுத்தமாட்டார்கள் (low risk nationals) என்று கருதுவோருக்கு மூன்று ஆண்டுகள் எப்போது வேண்டுமானாலும் வந்துபோகலாம் என்ற விசா வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

குழந்தை பராமரிப்பு இல்லத்திற்கு குழந்தைகளை அனுப்புவதற்கு உதவி தாமதமாகிறது!   

அடுத்த ஆண்டு துவங்கவிருந்த புதிய childcare subsidy திட்டம் மேலும் ஒரு ஆண்டு தள்ளிப்போடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. புதிய திட்டம் 2018 ஆண்டே துவங்கும். புதிய திட்டப்படி பெற்றோர் இருவாரத்திற்கு குறைந்தபட்சம் எட்டு மணி நேரம் வேலை செய்தால் குழந்தையை குழந்தை பராமரிப்பு இல்லத்திற்கு அனுப்ப அரசு நிதி உதவி வழங்கும். இதற்காக அரசு 3 பில்லியன் டாலர் செலவிட திட்டமிட்டுள்ளது. ஆனாலும் இத்திட்டம் உடனடியாக  துவங்காது என்று அரசு அறிவித்துள்ளது.

Childcare
Source: Getty Images

Tax Benefit Part B பிரிவில் தற்போது பெற்றோர் பெறும் நிதியைக் குறைக்க அரசு திட்டமிட்டிருந்தாலும், இந்த நிதிக் குறைப்பை எதிர்கட்சிகள் ஒட்டுமொத்தமாக நாடாளுமன்றத்தில் நிராகரித்ததையடுத்து, அரசு தான் முன்பு அறிவித்த சலுகையை தற்போது பின்போட்டுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now