ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான ஒரு புதிய வீசா எதிர்வரும் நவம்பர் மாதத்திலிருந்து அறிமுகமாகிறது. தொழில்முனைவோரை (entrepreneurs) ஆஸ்திரேலியாவிற்கு வரவழைப்பதற்காக இந்த புதிய வீசா அறிமுகமாகின்ற நிலையில் இதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.
இந்த வீசா மூலம் தொழில்முனைவோரில் மிகவும் புத்திசாலித்தனமானவர்களையும் சிறப்பானவர்களையும் ஆஸ்திரேலியாவிற்குக் குடிவரச் செய்வதே தமது நோக்கம் என்று தொழில்துறை மற்றும் கண்டுபிடிப்புக்களுக்கான அமைச்சர் கூறினார்.
இந்தப் புதிய வீசாவுக்கு விண்ணப்பிப்பவர்கள் தமது தொழில்முறைக்குத் தேவையான முதலீட்டை ஏற்கனவே பெற்றிருக்க வேண்டும். அத்துடன் தொழில்துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்காக வழங்கப்படும் Business Innovation and Investment (Provisional) visa subclass 188 சார்ந்த ஒரு வீசாவாக இது இருக்கும்.