லேபர் ஆட்சிக்காலத்தில் புகலிடம் கோரும் நோக்கில் படகு மூலம் வந்த 30 ஆயிரம் பேர் ஆஸ்திரேலியாவில் bridging visaவுடன் வாழ்ந்துவரும் நிலையில், இவர்களது விண்ணப்பங்களுக்கு விரைவாகவும் நியாயமாகவும் ஒரு முடிவைக் காணுமாறு ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பான UNHCR வலியுறுத்தியுள்ளது.
இவர்களுக்கான கல்வி மற்றும் வேலை செய்வதற்கான வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதும், தடுப்பு முகாமுக்கு அனுப்பப்படுவோமா அல்லது தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவோமா என்ற அச்சத்தில் எதிர்காலம் பற்றிய கேள்விகளோடு வாழ்வதும், இவர்களை மனநிலை ரீதியாக பாதிப்பதாக சுட்டிக்காட்டியுள்ள UNCHR அமைப்பின் மூத்த அதிகாரி Volker Turk, இதற்கு விரைவாக தீர்வு காணப்படவேண்டியது அவசியமென வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 10க்கும் மேற்பட்ட bridging visaவிலிருந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் தமது உயிர்களை மாய்த்துள்ள அதேநேரம் சிலர் வன்முறைச்சம்பங்களிலும் ஈடுபட்டுள்ள நிலையில், நிச்சயமற்ற எதிர்காலத்துடன் வாழ்வதால் ஏற்படும் விரக்தியே இதற்குக் காரணமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப்பின்னணியில் தாம் சந்தித்த bridging visaவிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் பலர் ஆஸ்திரேலிய சமூகத்திற்கு சிறந்த பங்களிப்பை வழங்கக்கூடியவர்களாகத் தென்படுவதாக UNHCR அமைப்பின் மூத்த அதிகாரி Volker Turk தெரிவித்துள்ளார்.
எனவே அரசு இன்னமும் இழுத்தடிக்காமல் நாட்டிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களுக்கான தீர்வை விரைவாகக் கொண்டுவரவேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
Share
