சிட்னி Evans High School-இல் கல்வி கற்கும் மாணவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் ஆங்கிலத்தைத் தவிர இரண்டாவது மொழியைப் பேசுவதாக கல்வியமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
குறிப்பாக 47 வகையான மொழிகளைப் பேசும் மாணவர்கள் அங்கு கல்வி கற்கின்றனர்.
அதேநேரம் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலுள்ள அரச பாடசாலைகளில் கல்விகற்கும் 33 வீதமான மாணவர்கள் ஆங்கிலமல்லாத மொழிப்பின்னணி கொண்டவர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
சிட்னியின் மேற்குப் பகுதியில் வாழும் 65.5 வீதமான மாணவர்களும் தெற்கு மற்றும் தென்மேற்கில் வாழும் 60 வீதமான மாணவர்களும் இரண்டாவது மொழியொன்றைப் பேசுகின்றனர்.
ஆங்கிலம் அல்லாத இரண்டாவது மொழி பேசும் மாணவர்களில் அதிகளவானோர் சீன மொழி பேசுகின்றனர். அதற்கடுத்தபடியாக அரேபிய மொழியும் அதற்கடுத்தபடியாக வியட்நாமிய மொழியும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.