SKIP TO MAIN CONTENT

சென்னையில் சினிமாவை மிஞ்சும் ரயில்கொள்ளை!

train
Source: AAP

2 min read

Published

Presented by Renuka.T



Skip to article content

சென்னையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கிக்கு சேலத்திலிருந்து பழைய ரூபாய் நோட்டுகள் 342 கோடி ரூபாய் விரைவு ரயில் மூலம் திங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. ஆனால் ரயில் சென்னை வந்தடைந்தபோது பார்த்தால், வரும் வழியில் அந்தரயில் பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.5 கோடிகொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

சேலத்தில் இருந்து ரயில் இரவு 9 மணிக்குபுறப்பட்டது. பணம் இருக்கும் பெட்டியில் பயணிகள் அமர அனுமதிக்கப்படவில்லை.பணம் உள்ள ரயில் பெட்டிக்கு முன் பெட்டியிலும், பின் பெட்டியிலும் ரயில்வே பாதுகாப்பு போலீஸார் வந்தனர். ரயில் நின்று சென்ற அனைத்து நிறுத்தங்களிலும் போலீஸார் இறங்கி இறங்கி சீல் சரியாக இருக்கிறதா என்றுபார்வையிட்டனர்.நேற்றுமுன்தினம் செவ்வாய் காலை 8 மணிக்கு ரயில் எழும்பூர் ரயில் நிலையத்தைவந்தடைந்தது. அங்கு ரயில்பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த சீலை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோதுரயில் பெட்டியின் மேற்கூரை வெல்டிங் கருவி மூலம்உடைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த பணப்பெட்டிகளை உடைத்து உள்ளே இருந்த 500 ரூபாய் கட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இதன் மொத்த மதிப்பு ஐந்து கோடி ரூபாய் என்று நம்பப்டுகிறது. 

தமிழகத்தில் ஓடும் ரயிலில் சினிமா பாணியில் பலகோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

A gang of robbers who cut a hole in the roof of a train travelling through southern India have stolen almost $1 million in cash, police said.The daring heist occurred somewhere along the more-than-300-kilometre-long journey, but authorities only realised the loot was missing hours after the express train arrived in the city of Chennai.The train's mail carriage was carrying 3.4 billion rupees ($65.9 million) belonging to India's central bank and was being escorted by armed police seated in the next compartment.

Police suspect about six to eight robbers made a 1.2-metre-square hole in the carriage roof using a cutting torch before escaping undetected with some of the cash.

 


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now