Watch FIFA World Cup 2026™ LIVE, FREE and EXCLUSIVE

சிறிலங்கா இராணுவ உயர் அதிகாரிக்கு ஆஸ்திரேலிய விசா மறுப்பு?

Visa Application Denied Stamp Shows Entry Admission Refused

Visa Application Denied Stamp Showing Entry Admission Refused Source: Wikipedia

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப்போரின்போது, போர்க்குற்றம் புரிந்ததாக சிறிலங்கா இராணுவத்தின் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ள நிலையில், அதை அடிப்படையாக வைத்து இராணுவ உயர் அதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் Chagie Gallage-க்கு, ஆஸ்திரேலிய விசா நிராகரிக்கப்பட்டுள்ளதாக The Island பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் வாழும் தனது சகோதரரைப் பார்ப்பதற்காக மேஜர் ஜெனரல் Chagie Gallage விசாவுக்கு விண்ணப்பித்திருந்த நிலையிலேயே, அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதற்கான காரணங்களாக இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப்போரின்போது குறிப்பாக 2009 மே 7 முதல் 2009 ஜுலை 20 வரை மேஜர் ஜெனரல் Chagie Gallage இராணுவத்தின் 59வது படையணியைத் தலைமைதாங்கி நடத்தியிருந்தமையையும்,  இலங்கைப் போர் தொடர்பில் Office of the High Commissioner for Human Rights, மற்றும் UNSG Panel of Experts உள்ளிட்டவற்றால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகளையும், The Australian Department of Immigration and Border Protection மேற்கோள்காட்டியுள்ளதாக அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது.

 


1 min read

Published

Updated

Presented by Renuka.T

Source: The Island



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Watch now