SKIP TO MAIN CONTENT

சிட்னி & மெல்பேர்ண் மக்களுக்கு ஆயுள் குறைவு!

stock

2 min read

Published

Presented by Renuka.T

Source: SMH



Skip to article content

சிட்னி மற்றும் மெல்பேர்ணில் எரிபொருள் பாவனையால், வளிமண்டலத்தில் உருவாகும் ஆபத்தான ஓசோன் மூலக்கூறு காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது.

நாட்டிலுள்ள எரிபொருள் நியமங்கள் தொடர்பில் அரசின் பணிப்பின்பேரில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன்படி எரிபொருள் நியமங்களில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் சுற்றுச்சூழல் மாசடைதலை குறைத்திருப்பதாகவும் இது நல்ல விடயம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

ஆனால் மறுபுறத்தில் மேம்படுத்தப்பட்ட எரிபொருள் நியமங்களால், வளிமண்டலத்தில் nitrogen dioxide இன் அளவு குறைவடைவதால் ஓசோனின் அளவு அதிகரிப்பதாகவும், இதனால் மக்களின் உடல்நலத்திற்கு கேடு ஏற்படுவதாகவும் இந்த அறிக்கை கூறுகின்றது.

கடந்த 2000ம் ஆண்டு ஓசோன் மாசடைதலால் ஏற்பட்ட நோய்கள் காரணமாக மெல்பேர்ணில் 465 பேரும், சிட்னியில் 617 பேரும்  உயிழந்த நிலையில் கடந்த வருடம் இந்த எண்ணிக்கை மெல்பேர்ணில் 636 ஆகவும், சிட்னியில் 744 ஆகவும் அதிகரித்துள்ளது.

இதுதவிர ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்தும் அதிகரித்துவருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தவிடயம் தொடர்பில் இவ்விரு மாநிலங்களும் கவனம் செலுத்தி மாற்றுவழிகளை அமுல்படுத்த வேண்டுமென இந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

A crackdown on poor fuel quality has inadvertently driven up dangerous ozone levels and is causing an estimated 300 deaths a year across Sydney and Melbourne, a federal government-commissioned report has found.

The report's expert authors have called on authorities to act to reverse the phenomenon, and environmental advocates say more must be done to prevent vapours escaping at petrol bowsers, which increases harmful ozone production.

The independent review of fuel quality laws, commissioned by the Department of the Environment, analysed the impact of changes to fuel standards since the introduction of current laws in 2000.

It found that fuel regulation had led to less pollutants and improved health outcomes in both Melbourne and Sydney - with the exception of ozone formation and exposure.

In a perverse effect, a reduction in nitrogen dioxide through improved fuel standards "is contributing to increased ozone production" which has resulted in adverse health outcomes, the report found.

Exposure to daily changes in ozone pollution in Melbourne caused an estimated 465 deaths in the year 2000, rising to 636 in the year 2015 – or 171 additional deaths last year, according to the scenarios modelled.

In Sydney, 617 such deaths were attributed to ozone in the year 2000, rising to 744 last year - an increase of 127 estimated annual deaths.


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now