SKIP TO MAIN CONTENT

சிட்னி Maroubra கடற்கரையிலிருந்து இரு சடலங்கள் மீட்பு!

srishti bhandari
Source: Facebook

1 min read

Published

Presented by Renuka.T

Source: SBS Hindi



Skip to article content

நேற்று முன்தினம் சிட்னி Maroubra கடற்கரையிலிருந்து 23 வயதான Srishti Bhandari என்ற பெண்ணின் உடல் மீட்கப்பட்டிருந்த நிலையில் அந்தப் பகுதியிலிருந்து இன்று காலை ஆண் ஒருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

Srishti Bhandari-வின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் விசாரணை நடத்திய காவல்துறையினர் அவர் கடந்த திங்கள் இரவு 26 வயதான Sudeep Uperty என்பவருடன் குறித்த கடற்கரையில் இருந்தார் எனக் கண்டறிந்ததையடுத்து Sudeep Uperty-ஐத் தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இன்று காலை Maroubra கடற்கரைக்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Sudeep Uperty
Source: Facebook

குறித்த உடல் யாருடையது என்பது இன்னமும் உறுதிசெய்யப்படாவிட்டாலும் அது Sudeep Uperty-ஆக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

கடற்கரையிலோ அல்லது கடலிலோ இருந்தபோது பாரிய கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டதால் இவர்கள் மரணமடைந்திருக்கலாம் என கூறப்படுகின்றது.

இதேவேளை மரணமடைந்தவர்கள் நேபாளப் பின்னணி கொண்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

 


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now