Watch FIFA World Cup 2026™ LIVE, FREE and EXCLUSIVE

சிட்னியில் 5 பேரைக் கொன்றவருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை!

AAP

Source: AAP

கடந்த 2009ம் ஆண்டு சிட்னி North Epping-இல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரைக் கொலை செய்த Robert Xie-க்கு வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

53 வயதான Robert Xie பரோலில் வெளியே வர முடியாதவாறு 5 வாழ்நாள் சிறைத்தண்டனை இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு துளி இரத்தக்கறை, சப்பாத்து அடையாளம் உட்பட பல ஆதாரங்கள் Robert Xie தான் கொலையாளி என்பதைக் காட்டிக்கொடுத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வஞ்சம் தீர்ப்பதற்காக இக்கொலைகள் செய்யப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

ஆனால் Robert Xie-இன் மனைவி Kathy Lin, தனது கணவர் இக்கொலைகளைச் செய்யவில்லை என இப்போதும் வாதாடிக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


1 min read

Published

Presented by Renuka.T

Source: ABC Australia



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Watch now