SKIP TO MAIN CONTENT

சிட்னியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சடலமாக மீட்பு!

AAP
Source: AAP

1 min read

Published

Presented by Renuka.T

Source: The Daily Telegraph



Skip to article content

சிட்னி, Sir Thomas Mitchell Drive, Davidsonஇல் உள்ள வீட்டினுள்ளிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கொலம்பிய பின்னணி கொண்ட 44 வயதான ஆண், 43 வயதான பெண், 9 வயதுச் சிறுவன் மற்றும் 10 வயதுச் சிறுமி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக The Daily Telegraph  செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த நால்வருடனும் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து இவர்களது நண்பர்கள் அல்லது உறவினர்கள் காவல்துறைக்கு அறிவித்திருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை அந்த வீட்டிலிருந்த நாயும் உயிரிழந்து காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்களது மரணத்திற்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  

 


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now