நியூ சவுத் வேல்ஸ் மற்றும் ACT பிராந்தியத்திலுள்ள Coles, Woolworths, IGA உட்பட ஏனைய விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்பட்ட 17 Bread rolls வகைகள் மீளப்பெறப்படுகின்றன.
Quality Bakers Australia Pty Limited இனால் உற்பத்தி செய்யப்பட்ட best before அக்டோபர் 2, 2016 என திகதியிடப்பட்ட இப்பொருட்களினுள் சிறு உலோகத்துண்டுகள் இருக்கக்கூடுமென சந்தேகிக்கப்படுவதால் இவை திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ், மற்றும் ACT பிராந்தியத்தில் உள்ள Coles, Woolworths, IGA உட்பட ஏனைய விற்பனை நிலையங்களில் கீழ்க்காணும் பொருட்களில் எவற்றையாவது கொள்வனவு செய்தவர்கள் அவற்றை உண்ண வேண்டாம் எனவும் விற்பனை நிலையங்களில் அவற்றைத் திரும்பக் கொடுத்து பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியுமெனவும் குறிப்பிடப்படுகின்றது.
• Coles White Round Rolls 6 Pack, plastic film
• Coles Smartbuy 6 Hamburger Rolls, plastic film
• Coles Smartbuy 6 Hot Dog Rolls, plastic film
• Coles White Long Roll 6 Pack, plastic film
• Mighty Soft Hot Dog P6, plastic film
• Mighty Soft Hamburger 5" P6, plastic film
• IGA Bakers Oven White Round Roll P6, plastic film
• IGA Bakers Oven Hot Dog Roll P6, plastic film
• IGA Bakers Oven Hamburger Roll P6, plastic film
• Hot Dog P6 Top Slice, plastic film
• Hamburger Jumbo 5" P12 Bulk, plastic film
• UB White Round Batch Roll P6, plastic film
• UB White SD SUB P6, plastic film
• UB White SD Round Roll 4" P6, plastic film
• UB White Hot Dog Roll 7" P6, plastic film
• UB AMERICAN SLD 5" Hamburger Roll P6, plastic film
• UB White SUB P6, plastic film
இது குறித்த மேலதிக விபரங்களுக்கு 1800 810 599 என்ற இலக்கத்தை அழைக்கலாம்.
