பண்டிகைக் காலத்தில் நண்பர்கள் பலருக்கும் பரிசுகளைக் கொடுப்போம். அப்படி எல்லோருக்கும் இலகுவாகக் கொடுக்கக்கூடிய பரிசு gift cards ஆகும்.
அவ்வாறு gift cards-ஐ பரிசாகக் கொடுக்கும் போது சில விடயங்களை கவனிக்க வேண்டும்.
1. NSW Fair Trading வெளியிட்ட தரவுகளின்படி, gift cards பற்றிய ஆய்வில் பங்கேற்ற 300 பேரில் 89 வீதமானவர்கள், தமக்குக் கிடைத்த gift cards-ஐப் பயன்படுத்த முடியவில்லை எனக் கூறியுள்ளனர். இதற்குக் காரணம் குறித்த gift cards காலாவதியானமையே ஆகும். எனவே gift cards-ஐ வாங்க முன்னர் அது எப்போது காலாவதியாகின்றதென்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பரிசு கொடுப்பவருக்கும் அதை ஞாபகப்படுத்துங்கள். உங்களுக்குக் கிடைத்த gift cards-ஐயும் மறந்துவிடாமல் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் பயன்படுத்துங்கள்.
2. Gift cards காலாவதியாகும் திகதி அதில் எழுதப்பட்டிருக்கவில்லை என்றால் permanent marker பயன்படுத்தி அதை எழுதிக் கொடுப்பது நல்லது. உங்களுக்குக் கிடைக்கும் gift cards இலும் இதைச் செய்யலாம்.
3. Gift cards-ஐ வாங்குவதற்கு உங்கள் கடனட்டையைப் பயன்படுத்தினால் அது cash advance-ஆக எடுத்துக் கொள்ளப்படலாம். எனவே gift cards-ஐ வாங்குவதற்கு பணத்தைப் பயன்படுத்துங்கள். அல்லது debit card-ஐப் பயன்படுத்துங்கள்.
4. Gift card வாங்கியதற்கான பற்றுச்சீட்டை வைத்திருங்கள். குறித்த gift card-ஐ பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டால், அப்போது அந்த பற்றுச்சீட்டு கட்டாயம் தேவைப்படும்.
5. Gift cards வாங்கும் போது அதைப் பெறவிருப்பவருக்கு உண்மையில் பலன் தருமா என்று யோசிக்க வேண்டும். எதைக் கொடுப்பது என்று தெரியவில்லையென்றால் பல இடங்களிலும் பாவிக்கக்கூடிய பொதுவான gift card- ஐ பரிசளிக்கலாம்.
6. Gift cards-ஐ வாங்க முன்னர் அந்த நிறுவனம் விரைவில் மூடப்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். உதாரணமாக Dick Smith நிறுவனம் சமீபத்தில் திவாலாகியமை உங்களுக்கு நினைவிருக்கலாம்.
Share
