Watch FIFA World Cup 2026™ LIVE, FREE and EXCLUSIVE

ஹாங்காங் செல்லும் இந்தியர்களுக்கு இலவச விசா ரத்து!

Indian Passport

Source: Supplied

சீனாவின் சிறப்பு நிர்வாக பிராந்தியமான ஹாங்காங்கில், இந்தியர்கள் விசா இல்லாமல் 14 நாட்கள் தங்க சலுகை வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்தச் சலுகை கடந்த 23ம் திகதியுடன் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஹாங்காங் குடியேற்றத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஹாங்காங் செல்லும் இந்தியர்கள், பயணத்துக்கு முந்தைய பதிவை Online மூலம் மேற்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றுலா மையமான ஹாங்காங்கில் வர்த்தக ரீதியாகவும், சுற்றுலாப் பயணிகளாகவும் ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் இந்தியர்கள் சென்று வரும் நிலையில், இந்த அறிவிப்பு ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்தச் சலுகை ரத்துக்கு, ஹாங்காங்கில் தஞ்சமடையும் இந்திய அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதே காரணம் என அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்ற போதிலும், இந்தியா தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


1 min read

Published

Presented by Renuka.T

Source: SBS Punjabi



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Watch now