உலகின் பல பாகங்களிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்ட மூவாயிரம் மாணவர்களுக்கு சர்வதேச புலமைப்பரிசிலை ஆஸ்திரேலியா வழங்குகின்றது.
இதன்கீழ் ஆஸ்திரேலிய மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று தமது ஆராய்ச்சி மற்றும் கற்கை நெறியை மேற்கொள்ளும் அதேநேரம் வெளிநாட்டிலுள்ள மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வந்து தமது கல்வியை மேற்கொள்ளலாம்.
மாணவர்கள்,தொழில்சார் பட்டதாரிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு aerospace engineering, law, medical studies,public health உள்ளிட்ட பல துறைகளில் இப்புலமைப்பரிசில் வழங்கப்படுகிறது.
இதன்படி அடுத்த வருடத்திற்கான புலமைப் பரிசில் வழங்கப்படவுள்ள மூவாயிரம் பேரின் விபரங்கள் Education and Training அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தியாவிலிருந்து 10 பேர், இலங்கையிலிருந்து 6 பேர், மலேசியாவிலிருந்து 5 பேர் மற்றும் சிங்கப்பூரிலிருந்து 3 பேர் உட்பட ஐக்கிய இராச்சியம், கனடா, அமெரிக்கா என பல நாடுகளிருந்து வரும் மாணவர்கள் ஆஸ்திரேலியா முழுவதுமுள்ள 67 கல்விநிலையங்களில் தமது ஆராய்ச்சி மற்றும் கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளனர்.
இச்செய்தி குறித்த மேலதிக விபரங்களுக்கும் ஆஸ்திரேலிய அரசு வழங்கும் இப்புலமைப் பரிசிலுக்கு எதிர்காலத்தில் நீங்களும் விண்ணப்பிக்கலாமா என்பதை அறிந்து கொள்வதற்கும் https://internationaleducation.gov.au/endeavour%20program/scholarships-and-fellowships/international-applicants/pages/international-applicants.aspx என்ற இணையத்தளத்திற்குச் செல்லவும்.