இன்று இரவில் தெரியும் நிலா, ‘சூப்பர் மூன்’ எனப்படுவது. பூமிக்கு மிக அருகில் நிலவானது காட்சியளிக்கப்போகிறது. அந்த நேரத்தில் நிலவானது மிகவும் பிரகாசமாகவும், மிகப்பெரியதாகவும் தோற்றமளிக்கும். வானத்தில் சாதாரணமாக பவுர்ணமி அன்று நிலவை காண்பதை விட பல மடங்கு மிகப்பெரியதாக காட்சியளிக்கும். இன்றை இரவு நிலவின் வெளிச்சம் 30 மடங்கு அதிகமானதாக இருக்கும்.
இந்த ‘சூப்பர் மூன்’ கடந்த 1948- ம் ஆண்டு தோன்றியது. அதனைத்தொடர்ந்து தற்போது 70 ஆண்டுக்குபின் பேருருவப் பெருநிலவாக இன்று இரவு தோன்றவுள்ளது.இனி இப்படியான பெரு நிலவு 2034 ஆம் ஆண்டே தோன்றும்.
நிலவானது பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரத்து 400 கிலோமீட்டர் தொலைவில் சுற்றி வருகிறது. இந்த பூமியை சுற்றிவரும் நிலவானது குறிப்பிட்ட நீள்வட்டப்பாதையில் செல்லாமல் அதில் இருந்து விலகி சில நேரங்களில் பூமிக்கு அதன் தொலைவில் இருந்து 48 ஆயிரம் கிலோமீட்டர் அருகில் வந்து செல்லும்.தற்போது இதே போல் பூமிக்கு மிக அருகாமையில் இன்று வந்து கடந்து செல்லும்.
இன்று இரவு முழு நிலவு அல்லது பெரு நிலவு தோன்றுவதையடுத்து பலர் வன்முறையில் ஈடுபடுவர் என்று போலீசார் அச்சம் கொண்டுள்ளனர். நிலவுக்கும், வன்முறைக்கும் சம்பந்தம் உண்டா இல்லையா என்பது தொடர்ந்து விவாதிக்கப்பட்டாலும், முழு நிலவு வரும்போதெல்லாம் வன்முறை சற்றே அதிகரிக்கும் என்று போலீசார் நம்புகின்றனர்.
இன்று இரவு “சூப்பர் மூன்” அல்லது பேருருவப் பெருநிலவு என்பதால் வன்முறை அதிகரிக்கும் என்று Geoff Sheldon கூறியுள்ளார். இவர் Brisbane நகரில் காவல் துறையில் பணியாற்றுகின்றார் என்றும் அவரின் அனுபவத்தில் முழு நிலவுக்கும் வன்முறை அதிகரிப்பிற்கும் தொடர்பு உள்ளது என்றும் அதையே அவர் Charles Sturt University யுடன் இணைந்து ஆராய்ச்சி கட்டுரையாக வெளியிட்டுள்ளார் என்றும் Fairfax ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. ஆனால் போலீசாரின் நம்பிக்கை வெறும் கனவு கட்டுக்கதையா (myth) அல்லது உண்மைதானா என்பது இன்று இரவு தெரிந்துவிடும்.
Share
