SKIP TO MAIN CONTENT

IS அமைப்பைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுபவர் சிட்னியில் கைது!

Sydney police raids
Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka.T



Skip to article content

சிட்னியின் Birrong பகுதியில் பயங்கரவாத தடுப்புப்பிரிவினரால் நடத்தப்பட்ட சோதனையைடுத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஐஎஸ் அமைப்புடன் சேர்ந்து போரிட்ட மிக ஆபத்தான நபர் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரால் தாக்குதல் அச்சுறுத்தல் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை என்றாலும் நீண்ட காலம் நடத்தப்பட்ட விசாரணைகளின் முடிவில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இக் கைதினை அடுத்து பாரிய தேடுதல் நடவடிக்கை காவல்துறையினரால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகிறது.

 


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now