ஜனவரி 1 முதல் நம்மைப் பாதிக்கவிருக்கும் மாற்றங்கள் எவை?

Banknotes

Source: AAP

2017 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் புதிய மாற்றங்களினால் நாடு முழுவதுமுள்ள பலர் பாதிக்கப்படவுள்ளனர். அவை என்னென்னவென்று பார்ப்போம்.

1. Regular unleaded பெற்றோல் பாவனையைக் குறைக்கும் நோக்கில் E10 பெற்றோல் விற்பனை கட்டாயமாக்கப்படுவதால், அதை விரும்பாத பலர் premium unleaded பெற்றோலுக்கு மாற வேண்டியிருக்கும். எனவே புதுவருடம் முதல் பெற்றோலுக்கு அதிக பணம் செலவாகக்கூடும்.

2. விக்டோரியா மாநிலத்தின்  Hazelwood-இல் உள்ள  நிலக்கரிச்சக்தியால் இயங்கும் மின்சார உற்பத்தி  ஆலை மூடப்படுவதன் காரணமாக, வீடுகளுக்கான மின்சாரத்தின் விலை உயரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு 78 டொலர்கள் முதல் 150 டொலர்கள் வரை மின்கட்டணம் உயரும் என Australia Energy Market Commission வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது .

3. 2017 ஜனவரி 1 முதல் ஒருவரின் ஓய்வூதியத் தொகை அவரிடம் இருக்கும் சொத்துக்களை அடிப்படையாக வைத்து, அதாவது The Age Pension assets test  என்ற மீளாய்வு செய்யப்பட்ட முறையின் கீழ் கணிப்பிடப்படவுள்ளது. இதனடிப்படையில் நாடு முழுவதுமுள்ள 171,500 பேர் தமது ஓய்வூதியத் தொகையுடன் 30 டொலர்கள் (fortnight) அதிகம் பெறவுள்ளனர். அதேநேரம் 236,000 part-pensioners - க்கான கொடுப்பனவு குறைக்கப்படவுள்ளதுடன் 91,000 part-pensioners எவ்வித கொடுப்பனவுகளையும் பெறமாட்டார்கள்.

4. அரசின் free public dental services-இலவச பல் மருத்துவ சேவைகளில் கொண்டுவரப்படும் மாற்றத்தினால் 338,000 பேர் பாதிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன்படி சிறுவர்களுக்கான பல் மருத்துவ சலுகைத் தொகை 1000 டொலரிலிருந்து 700 டொலராக குறைக்கப்படவுள்ளது.

5. பெருந்தொகையான அரச கொடுப்பனவுகளை பொய் சொல்லியோ அல்லது தவறுதலாகவோ பெற்றவர்கள் அதனைத் திரும்பச் செலுத்துவதற்கான repayment plan ஒன்றை வடிவமைத்து, அத்தொகையைத் திரும்பச் செலுத்த வேண்டுமென்பது கட்டாயமாகும். புதுவருடம் முதல் அவ்வாறு செய்யத் தவறுபவர்களுக்கு 8.76 வீத வட்டி அறவிடப்படவுள்ளது.

6. ஜனவரி 1 முதல் backpackers-ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்து வேலை செய்யும் வெளிநாட்டவர்கள், 15 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.

7. ஜனவரி முதலாம் திகதி முதல் மெல்பேர்ன் பொதுப்போக்குவரத்துக் கட்டணம் 5 சதவீதத்தால் உயர்த்தப்படுகிறது.
இதன்படி இரு மணிநேரத்துக்கான பஸ்,tram மற்றும் தொடரூந்துப் பயணங்களுக்கான myki கட்டணம் 20 சதங்களால் அதிகரித்து $4.10 ஆக அறவிடப்படும். அதேபோல் முழு நாளுக்குமான கட்டணம் $8.20 ஆக அதிகரிக்கிறது.
இது தவிர வருடாந்த adult Myki pass கட்டணம் 80 டொலர்களால் அதிகரிக்கப்படுகின்ற அதேநேரம் concession ticket கட்டணம் 10 சதங்களால் அதிகரித்து $2.05 ஆக மாற்றப்பட்டுள்ளது.
எனினும் concession ticket, முன்னர் 16 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி 18 வயது வரையான இளைஞர்களும் இதற்குள் அடங்குகின்றனர்.
மேலும் 5 வயதுக்குக் குறைவான சிறுவர்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

8. குழந்தைகளைப் பராமரிப்பவர்களுக்கென அரசு வழங்கிய Nanny Trial பரீட்சார்த்த மானியத்திட்டத்திலும் மாற்றம் வருகிறது. இம்மானியத்திட்டம் புதிதாக இணைந்து கொள்ளும்  குடும்பங்களுக்குக் கிடையாது என்பதுடன், குழந்தை பராமரிப்பாளர்களுக்கான இடஒதுக்கீடு 3000 இலிருந்து 500 ஆக குறைக்கப்படுகின்றது.

9. பாஸ்போர்ட் பெறுவதற்கான கட்டணமும் அதிகரிக்கிறது. 10 வருட பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் 254 டொலர்களிலிருந்து 277 டொலர்களாக அதிகரிக்கும் அதேநேரம் 16 வயதுக்கு குறைந்தவர்களுக்கான 5 வருட பாஸ்போர்ட் கட்டணம் 127 டொலர்களிலிருந்து 139 டொலர்களாக அதிகரிக்கின்றது. மேலும் துரிதகதியில் பாஸ்போர்ட்டைப் பெறுவதற்கான priority processing fee 127 டொலர்களிலிருந்து 183 டொலர்களாக அதிகரிக்கப்படுகின்றது

10. The Department of Foreign Affairs and Trade ஆவணங்களை உறுதிப்படுத்துதல் மற்றும் அத்தாட்சிப்படுத்தலுக்கான notarial services கட்டணத்தை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.

 

Share

3 min read

Published

Presented by Renuka.T



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand