மெல்பேர்ன் Noble Park பகுதியைச் சேர்ந்த ருபுஷினி சச்தானந்தமூர்த்தி Rubushini Sachthananthameorthy என்ற 16 வயது மாணவியைக் காணவில்லை எனவும் இவரைக் கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியை நாடி நிற்பதாகவும் காவல்துறை அறிவித்துள்ளது.
குறித்த பெண்ணை கடைசியாக நவம்பர் 10ம் திகதி காலை 10.30 மணிக்கு Noble Park High Schoolஇல் பாடசாலைச்சீருடையுடன் பலர் கண்டதாகவும் அதன் பின்னர் இவரைக் காணவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இவர் Sunshine வடக்கில் உள்ள நண்பருடன் இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள போதிலும் ருபுஷினியின் வயது காரணமாக அவரது நலனில் தாம் அக்கறை கொண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
எனவே ருபுஷினி பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அல்லது அவரை எங்கேயாவது கண்டால் உடனடியாக 9767 7444என்ற இலக்கத்தில் Dandenong காவல்துறையைத் தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: Victoria Police

Source: Victoria Police
Share
