தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் தொடர்பாக கருத்தமர்வு நிகழ்வு மெல்பேர்ணில் தமிழ் ஏதிலிகள் கழகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் புகலிடக் கோரிக்கைக்கான விண்ணப்பம் குறித்த தகவல்களைப் பரிமாறுவதற்கு தமிழ் சட்ட வல்லுனரான அவனிதா செல்வராஜா கலந்து கொள்ள இருக்கிறார்.அத்துடன் தமிழ் ஏதிலிகள் கழகத்தின் குமார் நாராயணசாமியும் பங்குபற்றுகிறார்.
தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்கள், அவர்களது நலன் விரும்பிகள், மற்றும் புகலிடக் கோரிக்கைக்கான விண்ணப்பம் பற்றிய தகவல்களை அறிய விரும்புவோர் இந்தக் கருத்தமர்வில் கலந்துகொள்ளலாம் என தமிழ் ஏதிலிகள் கழகம் அழைப்புவிடுத்துள்ளது.
காலம்: 4PM Saturday 15th October 2016
இடம்: Dandenong Uniting Church, 32 Scott Street Dandenong
மேலதிக தகவல்களுக்கு: 0410197814 (கரன்) 0479106356 (குமார்)
