SKIP TO MAIN CONTENT

கடனட்டை பயன்படுத்தும்போது இனி அளவுக்கதிகமாக Surcharges கிடையாது!

Credit cards
Source: AAP

1 min read

Published

Presented by Renuka.T

Source: ABC Australia



Skip to article content

Credit Cards-கடனட்டைகளைப் பயன்படுத்தி விமானப் பயணச் சீட்டுக்கள், சினிமா மற்றும் கால்பந்து போட்டிக்கான நுழைவுச்சீட்டுக்கள், ஏன் கடைகளில் பொருட்களை வாங்கும் போது Surcharges எனப்படும் மேலதிக கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம்.

ஆனால் செப்டம்பர் முதலாம் திகதி முதல் ஆஸ்திரேலியாவின் பெரிய நிறுவனங்கள் EFTPOS, MasterCard, Visa, American Express card ஆகியவற்றைப் பயன்படுத்தி நாம் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போதோ அல்லது வேறு தேவைகளுக்காக இவற்றைப் பயன்படுத்தும் போதோ Surcharges எனப்படும் மேலதிக கட்டணத்தை அளவுக்கதிகமாக அறவிட முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆண்டொன்றுக்கு 25மில்லியன் வருமானமீட்டும் நிறுவனங்கள் தம்முடைய விருப்பத்திற்கு Surcharge அறவிட முடியாதெனவும் Australian Competition and Consumer Commission (ACCC)ஆல் நியமிக்கப்பட்ட வரையறைக்குட்பட்டே இதனை அறவிட முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறும்பட்சத்தில் மிகப்பெரும் தொகை தண்டப்பணமாகச் செலுத்த நேரிடும்.

தற்போது இச்சட்டம் பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் பொருந்தினாலும் அடுத்த ஆண்டு செப்டம்பர் முதல் நாட்டிலுள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் இச்சட்டம் அமுல்படுத்தப்படுமென Australian Competition and Consumer Commission (ACCC) அறிவித்துள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now