Know your medicine

மருந்தை சாப்பிட மறந்துவிட்டால் என்ன செய்யலாம் ?

Various over the counter painkillers for sale at a pharmacy in Melbourne, Saturday, July 7, 2012. (AAP Image/David Crosling) NO ARCHIVING

Medicine Source: AAP

ஆஸ்திரேலியாவில் மருந்துகள் எனும் தலைப்பில் கேள்வி – பதில் வடிவில் இந்த கட்டுரையை  எழுதியிருப்பவர் அன்பு ஜெயா அவர்கள். அவர் Pharmaceutical Chemistயாக பணியாற்றியவர்.   

 

  1. 1.   On-line Medicines - இவற்றைவாங்கலாமா?

 

On-line Medicines - அதிகமாக வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. அவை எப்படிப்பட்ட சூழ்நிலையில் தயாரிக்கப்பட்டன, அவற்றின் தரம் எப்படி என்பது தெரியாது. அவற்றில் தவறான மூலமருந்து இருக்கலாம், மூலமருந்து குறைவாகவோ அதிகமாகவோ இருக்கலாம், ஆபத்தான வேதியப் பொருள்கள் கலந்து இருக்கலாம், நச்சுத்தன்மை காரணமாக முன்பே தடைசெய்யப்பட்ட மூலமருந்துகூட அவற்றில் இருக்கலாம். அவற்றை சாப்பிடுவதால் விபரீதமான விளைவுகள் உண்டாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

 

உதாரணமாக, ஆஸ்திரேலியாவில் Mi Show Slimming capsule – என்ற மருந்தை பலர் சமீபத்தில் On-line- மூலம் வாங்கியிருக்கிறார்கள். அந்த capsule-களில் 2010-ஆண்டிலேயே உலகெங்கிலும் தடைசெய்யப்பட்ட ஒரு வேதியப் பொருள் இருப்பதை TGA கண்டுபிடித்து சென்ற ஜூலை மாதம் அதன் இணையதளம் மூலம் பொதுமக்களை எச்சரிக்கை செய்துள்ளது. சுங்க அதிகாரிகளுக்கும் அந்த மருந்து ஆஸ்திரேலியாவிற்குள் வருவதை தடை செய்யும்படி தெரிவித்துள்ளது. 

 

பார்வைக்கு அச்சாக இங்கு விற்பனை செய்யப்படுகின்ற சில மருந்துகளைப் போலவே தோற்றமளிக்கும் போலி மருந்துகளும் internet-ல் அவ்வப்போது விளம்பரப் படுத்தப்படுகின்றன. அவற்றை உற்று நோக்கினால் சில வித்தியாசங்களைக் காண முடியும். அதனால் ஆஸ்திரேலியாவில் சட்டப்படி விற்பனைக்கு அனுமதி பெற்ற மருந்துகளையே வாங்க வேண்டும். இது பற்றி TGA இணையதளத்தில் “Buying Medicines and medical devices on-line” என்ற ஒரு பகுதியில் விரிவாகக் கூறியுள்ளார்கள்.

 

  1. 2.   விடுமுறையில்தங்கள்நாடுகளுக்குச்சென்றுதிரும்பிவரும்போதுசிலர்prescription medicines-களையும், நாட்டுமருந்துகளையும்கொண்டுவரஅனுமதிஅல்லதுவழிமுறைகள்உள்ளதா?

 

சில கட்டுப்படுகளுக்கு உட்பட்டு, பெரும்பாலான presciption medicines கொண்டு வர தடை இல்லை. அந்த மருந்துகள் உங்கள் சொந்த உபயோகத்திற்காக இருக்கவேண்டும், அதற்கான மருத்துவர் சீட்டை நீங்கள் வைத்திருக்க வேண்டும், அவை விற்கப்படும் லேபில், பெட்டியுடன் இருக்கவேண்டும். அதிகபட்சமாக 3 மாதங்களுக்கு தேவையான அளவு மருந்து மட்டுமே கொண்டு வர அனுமதி உள்ளது. ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிநாடு செல்லும்போதும் இதே கட்டுப்படுகள் உள்ளன.

பெரும்பாலான நாட்டு மருந்துகள் complementary medicines வகையைச் சேர்ந்தவை. நீங்கள் கொண்டுவரும் மருந்தில் என்னென்ன மூலப்பொருள்கள், தாவரங்கள் அல்லது  மற்ற பொருள்கள் உள்ளன என்பது தெரிந்திருக்க வேண்டும். சில பொருட்கள் அடங்கிய மருந்துகளை முன்னனுமதி (permit) பெற்றுதான் கொண்டுவர வேண்டும். இதுபற்றி மேலதிக விவரங்களை ஆஸ்திரேலிய சுங்கவரி இலாகாவின் இணையதளத்தில் (www.border.gov.au) உள்ள Travelling with Medicines என்ற பிரசுரத்தில் காணலாம்.

 

  1. 3.   மருந்துகளைசாப்பிடும்முன்னும்சாப்பிட்டபிறகும்என்னமுன்னெச்சரிக்கைஎடுக்கவேண்டும்?

 

இது ஒவ்வொரு மருந்துக்கும் மாறுபடும். மருந்துகளை வாங்கும்போது இதுபற்றி Pharmacist-ஐ கேட்டு தெரிந்துகொள்வது நல்லது. பொதுவாக ஒரு மருந்தை உட்கொள்ளும் முன் அதன் Label-ல் உள்ள விபரங்களை படிக்கவேண்டும். Prescription மருந்துகளின் Label-களில் அதிக விபரம் இருக்காது. அதனால் மருந்து வாங்கும்போது Pharmacist-டிடம் அந்த மருந்திற்கான Consumer Medicine Information வேண்டுமென்று கேளுங்கள். சுருக்கமாக இதை C.M.I என்று கூறுவார்கள். ஆஸ்திரேலியாவில் விற்கப்படும் Prescription மருந்துகள் அனைத்திற்கும் C.M.I. இருக்கவேண்டும். C.M.I-ல் அந்த மருந்து பற்றிய முக்கிய விவரங்கள் இருக்கும். சில பார்மசிகளில் சுருக்கமான C.M.I. வைத்திருப்பார்கள். Prescription தேவை இல்லாத OTC மருந்துகளுக்கும் கூட சில மருந்து தயாரிப்பாளர்கள் C.M.I. தயார் செய்து வைத்திருப்பார்கள். ஆனால் அது கட்டாயமில்லை. உங்கள் Pharmacist மூலம் அவற்றைப் பெறமுடியும். சில C.M.I. TGA இணைய தளத்தில் உள்ளன

 

மருத்துவர் சாப்பிடச் சொன்ன அளவைவிட அதிகமான அளவு மருந்தை சாப்பிடலாமா?

 

அது சரியில்லை, தவறானது. சில மருந்துகளைப் பொருத்தவரை இது ஆபத்தானதும் கூட. ஒவ்வொரு மருந்தையும் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கும் போது அந்த மருந்து பலன் தருவதற்கு தேவையான அளவு, அந்த மருந்து ஆபத்தான விளைவுகளை தரக்கூடிய அளவு போன்றவற்றைக் கணித்திருப்பார்கள். எனவே, மருந்து பலன் தரக்கூடிய அளவையே பரிந்துரை செய்திருப்பார்கள். அதுபற்றிய விவரமும் உங்கள் மருத்துவருக்குத் தெரியும். எனவே அதை மீறக்கூடாது.

 

  1. 4.   ஒருமுறைஎடுக்கமறந்துவிட்டமாத்திரையைஅடுத்தமுறைஇரண்டாகஎடுக்கலாமா?

 

அப்படி ஒருபோதும் எடுக்கக் கூடாது. அடுத்த Dose எடுக்க பல மணி நேரங்கள் இருக்கிறதென்றால் நினைவு வந்தவுடன் விட்டுவிட்ட Dose எடுக்கலாம். ஆனால், அடுத்த Dose எடுக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டால் இரண்டாக எடுக்கக் கூடாது.

 

  1. 5.   அளவுக்குஅதிகமாகஒருமருந்தைதவறுதலாகசாப்பிட்டுவிட்டால்என்னசெய்வது?

 

மருந்தை அதிகமாக சாப்பிட்டவரின் நிலைமையைப் பொறுத்து உடனே அருகிலுள்ள மருத்துவ மனைக்குச் சென்று உதவி பெறவேண்டும். மருந்து சாப்பிட்டவரின் நிலைமை மோசமாக இருந்தால் 000 எண்ணைத் தொடர்புகொண்டு ஆம்புலன்சை அழைக்கலாம். அவசரமான நிலை இல்லை என்றால், ஆஸ்திரேலியாவில் எங்கிருந்தாலும் Poison Information Centre-க்கு 131126என்ற எண்ணுக்கு 24-மணி நேரமும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு மருந்தின் விளைவுகளைப் பற்றி அறிந்துகொண்டு என்ன செய்யவேண்டும் என்பதை அவர்கள் அறிவுரையின் பேரில் முடிவு செய்யலாம். 

 

(கட்டுரையாளர்: அன்பு ஜெயா, Pharmaceutical Chemist ) 

 

இக்கட்டுரையில் தரப்பட்டிருக்கும் தகவல்கள் பொதுவான தகவல் மட்டுமே. அதிக தகவலுக்கும், குறிப்பிட மருந்துபொருட்கள் குறித்த தகவலுக்கும் நீங்கள் Therapeutic Goods Administration ஐ தொட்ரபுகொள்ளுங்கள். TGA-வின் இணைய தளம் www.tga.gov.au TGA தகவல் அறியும் தொலைபேசி இலக்கம்: 1800 020 653 அல்லது 02 6232 8644. மின்னஞ்சல் முகவரிinfo@tga.gov.au


Share

3 min read

Published

By Raymond Selvaraj



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Watch now