
எட்மண்ட் பார்ட்டன் Edmund Barton (1901-1903)
ஆஸ்திரேலியாவின் முதல் பிரதம மந்திரி என்ற பெருமை இவரைச் சாரும். 1901ம் ஆண்டு ஜனவரி முதல் நாள், சிட்னி நகரில் இந்த மதிப்பு மிக்க நிலையைப் பெற்றார், எட்மண்ட் பார்ட்டன்.
He was the first prime minister of Australia, taking charge of this prestigious position on 1st January, 1901 in Sydney.

ஆல்ஃபிரட் டீகின் Alfred Deakin (1903-1904; 1905-1908; 1909-1910)
ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பிரதம மந்திரியாக இருந்த ஆல்ஃபிரட் டீகின், இந்தப் பதவியை மூன்று முறை வைத்திருந்த பெருமைக்குரியவர்.
Not only was he Australia’s second prime minister, but he also had the honour of holding this position three times.

கிறிஸ் வாட்சன் Chris Watson (1904)
லேபர் கட்சியிலிருந்து தெரிவான முதல் பிரதம மந்திரியானாலும் நான்கு மாதங்களில் அவர் பதவி விலக வேண்டியதாயிற்று.
He was our first Labor prime minister but he stayed in office for only four months.

ஜார்ஜ் ரீட் George Reid (1904-1905)
நாட்டின் நான்காவது பிரதம மந்திரியின் பதவிக்காலம் ஒரு ஆண்டை விடக் குறைவாக இருந்தது.
The fourth prime minister of the country also held the office for a brief period and his term ended in less than a year.

ஆண்ட்ரூ ஃபிஷர் Andrew Fisher (1908-09; 1910-1913; 1914-1915)
மூன்று முறை பிரதம மந்திரியாகப் பதவி வகித்த இவர், லேபர் கட்சி நிறுவிய முதல் உறுப்பினர்களில் ஒருவர் என்று கருதப்படுகிறது.
He also held office of the prime minister three times, and is considered among the founding members of Labor party.

ஜோசப் குக் Joseph Cook (1913-1914)
அவர் பிரதமராகியபோது, ஆஸ்திரேலியாவின் ஆறாவது பிரதம மந்திரியாக இருந்தாலும் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அரசியலில் அனுபவம் பெற்றிருந்தார்.
When he took the office, the sixth prime minister had more than three decades of experience in politics.

வில்லியம் மோரிஸ் ஹியூஸ் William Morris Hughes (1915-1923)
ஏழு ஆண்டுகள் தான் ஆஸ்திரேலிய பிரதமராகக் கடமையாற்றியிருந்தாலும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் மந்திரியாகவும் அரை நூற்றாண்டுக்கும் மேலாகக் கடமையாற்றியிருக்கிறார். ஆஸ்திரேலிய பாராளுமன்ற வரலாற்றில் அதிக நாட்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பெருமை இவரைச் சாரும்.
He served the country as its prime minister for seven years, and in total spent more than five decades as a member of House of Representatives.

ஸ்டான்லி மெல்போர்ன் புரூஸ் Stanley Melbourne Bruce (1923-1929)
ஆறு ஆண்டுகளாக ஆஸ்திரேலிய பிரதம மந்திரியாகக் கடமையாற்றிய இவர், மிகவும் இளமையான பிரதம மந்திரி என்ற நிலையில், இரண்டாவது இடத்தைப் பெறுகிறார்.
The second youngest prime minister of Australia stayed in office for six years.

ஜேம்ஸ் ஸ்க்கலின் James Scullin (1929-1932)
லேபர் கட்சியைச் சார்ந்த இவர் பிரதம மந்திரியாக இருந்த போது நமது நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்ன்டைவைக் கண்டது என்றும் உலக பொருளாதார வீழ்ச்சி எம் நாட்டையும் தாக்கியதற்கு இவர் முகம் கொடுக்க வேண்டியதாயிற்று.
The Labor prime minister witnessed the impacts of the Great Depression on our economy and termed his tenure a nightmare.

ஜோசப் லியோன்ஸ் Joseph Lyons (1932-1939)
அவர் ஏழு ஆண்டுகள் எங்கள் பிரதம மந்திரியாக இருந்தார். பதவியில் இருக்கும்போதே மரணமடைந்த முதல் பிரதமர் இவர் தான்.
He was our prime minister for seven years and the first one to die in office.

ஏர்ள் பேஜ் Earle Page (1939)
20 நாட்கள் மட்டுமே ஆஸ்திரேலிய பிரதம மந்திரியாக இருந்தவர் ஏர்ள் பேஜ்.
He was Australia’s prime minister for only 20 days.

ரொபேர்ட் மென்ஸிஸ் Robert Menzies (1939-1941; 1949-1966)
18 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டை வழிநடத்திய ரொபேர்ட் மென்ஸிஸ், ஆஸ்திரேலியாவில் அதிக காலம் பிரதமராக இருந்தவர் என்ற பெருமைக்குள்ளாகிறார். அவரது பிரதமர் பதவி தொடர்ச்சியாக இல்லாமல் இரு வேறு காலங்களில் அமைந்திருந்தது.
The longest serving prime minister of Australia held this office twice. In total, he led the country for over 18 years.

ஆர்தர் ஃப்படன் Arthur Fadden (1941)
40 நாட்கள் மட்டும் பிரதமராக இருந்த குவீன்ஸ்லாந்து மாநிலத்தவர்.
The Queenslander was prime minister for only 40 days.

ஜான் கர்டின் John Curtin (1941-1945)
இரண்டாம் உலகப் போரின் போது பிரதமராக இருந்த இவர், எமது தலைசிறந்த பிரதமர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
Regarded as one of our greatest prime ministers, he was an instrumental figure during the World War II.

பிரான்சிஸ் ஃபோர்ட் Francis Forde (1945)
அவர் அவரது முன்னோடி இறந்தபின் எட்டு நாட்கள் மட்டும் இவர் பிரதமராகப் பணியாற்றினார்.
He served as prime minister for only eight days after the death of his predecessor.

பென் ச்சிஃப்ஃளி Ben Chifley (1945-1949)
ஜான் கர்டின் இறப்பிற்குப்பிறகு லேபர் கட்சியின் தலைமையை ஏற்று, நாட்டின் 16வது பிரதம மந்திரி ஆனார்.
He took reins of the Labor party after Curtin’s death and later became the nation’s 16th prime minister.

ஹரோல்ட் ஹோல்ட் Harold Holt (1966-1967)
ரொபேர்ட் மென்ஸிஸின் 16-ஆண்டு கால பிரதமர் பதவி முடிவுக்கு வந்த பின்னர், நம் நாட்டின் பிரதம மந்திரி ஆன ஹரோல்ட் ஹோல்ட், அதிகாரத்தில் இருந்தபோது கடலில் நீரில் மூழ்கி இறந்தார்.
He became our nation’s prime minister after Robert Menzies’ 16-year term came to an end. While in office Harold died after drowning at sea.

ஜான் மக்எவன் John McEwen (1967-1968)
ஹரோல்ட் ஹோல்ட் கடலில் மூழ்கியதைத் தொடர்ந்து, நாட்டின் தலைமையை ஏற்றுக்கொண்டார்.
He took over the country’s command after the death of Harold Holt.

ஜான் கோர்டன் John Gorton (1968-1971)
அவர் லிபரல் கட்சியின் தலைவராக, ஆஸ்திரேலியாவின் 19 பிரதம மந்திரி ஆனார்.
He replaced Harold Holt as Liberal party’s leader and became Australia’s 19th prime minister.

வில்லியம் மக்மஹோன் William McMahon (1971-1972)
மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஆஸ்திரேலிய அரசியலில் பணியாற்றிய மற்றொரு லிபரல் கட்சிப் பிரதம மந்திரி.
Another Liberal prime minister, he served Australian politics for more than three decades.

கஃப் விட்லம் Gough Whitlam (1972-1975)
கஃப் விட்லம் தலைமையில், 20க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பின் லேபர் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தது. ஆனால், அவரது அரசாங்கத்தை, கவர்னர்-ஜெனரல் தள்ளுபடி செய்த போது இவர் பிரதமர் பபவி பறிபோனது.
His leadership brought the Labor party back in office after more than 20 years. His government was dismissed by the Governor-General.

மால்கம் ஃப்ரேசர் Malcolm Fraser (1975-1983)
அவர் கஃப் விட்லம் பதவிநீக்கம் செய்யப்பட, இடைக்காலப் பிரதமராக ஆனார். பின்னர் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகத் தெரிவாகினார்.
He became caretaker prime minister after Gough Whitlam and returned in office again after the election.

ராபர்ட் ஹாக் Robert Hawke (1983-1991)
லேபர் கட்சியைச் சார்ந்த இவர், எதிர்க்கட்சித் தலைவராக ஒரு மாதம் மட்டுமே இருந்துவிட்டுப் பிரதமரானார். அதிக காலம் பிரதம மந்திரியாக இருந்த லேபர் கட்சி உறுப்பினர் என்ற பெருமையும் இவருக்கே.
Australia’s longest serving Labor prime minister secured the top office after being the opposition leader for only one month.

பால் கீட்டிங் Paul Keating (1991-1996)
ஆஸ்திரேலியாவின் 24வது பிரதம மந்திரி, தனது 25 வயதிலேயே, நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
The 24th prime minister of Australia was first elected for a House of Representative seat at the age of 25.

ஜான் ஹாவார்ட் John Howard (1996-2007)
ஆஸ்திரேலியாவின் பிரதமராக அதிக காலம் இருந்தவர்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும் ஜான் ஹாவார்ட், 2003ம் ஆண்டு ஈராக்கிற்கு எதிரான போரை ஆதரிக்க முடிவு செய்தவர்.
The second longest serving prime minister of Australia made the decision to support Iraq war in 2003.

கெவின் ரட் Kevin Rudd (2007-2010; 2013)
பிரதம மந்திரியாகக் கடமையாற்றியபோதே, கட்சித் தலைமையிலிருந்து நீக்கப்பட்ட சிலரில் இவரும் ஒருவர். லேபர் கட்சியின் தலைமைப் பொறுப்பை மீண்டும் எற்ற பின்னர் சில காலம் மீண்டும் பிரதமராகக் கடமையாற்றினார்.
He was one of the few leaders to have been removed from party leadership while serving as prime minister. Later, he once again became prime minister after Labor party made him its leader again.

ஜூலியா கில்லார்ட் Julia Gillard (2010-2013)
ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமரான இவர், லேபர் கட்சியின் தலைமைத்துவத்துக்கான போட்டியில் கெவின் ரட் அவர்களைத் தோற்கடித்து இந்தப் பதவியை ஏற்றார்.
The first woman prime minister of Australia took over Labor’s leadership from Kevin Rudd before being defeated in a leadership ballot by him.

ரோனி அப்போட் Tony Abbott (2013-2015)
ஆஸ்திரேலியாவின் 28வது பிரதம மந்திரியான இவர், இரண்டு ஆண்டுகள் பதவியிலிருந்த பின், மால்கம் டர்ன்புள் கட்சித் தலைமையை ஏற்றதால் பிரதமர் பதவியை இழந்தார்.
The 28th prime minister of Australia lost his leadership battle against Malcolm Turnbull after serving two years in office.

மால்கம் டர்ன்புள் Malcolm Turnbull (2015-)
லிபரல் கட்சி உறுப்பினர். நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்று முடிவு செய்ய நடக்கும் தேர்தலில் லிபரல் கட்சியை வழிநடத்துகிறார்.
The Liberal party member is leading the party into the election to decide the country’s next prime minister.
Source: National Archives of Australia
ஆதாரம்: ஆஸ்திரேலியா தேசிய காப்பகம்
