SKIP TO MAIN CONTENT

முகில் உருவத்தால் பரவசமடைந்த Tonga மக்கள்!

7news
Source: 7News

1 min read

Published

Presented by Renuka.T



Skip to article content

பசுபிக் தீவு நாடுகளில் ஒன்றான Tonga-வில், வானில் அவதானிக்கப்பட்ட முகில்களாலான தோற்றம் ஒன்று அங்கு வாழ்பவர்கள் மத்தியில் பரபரப்பையும் பரவசத்தையும் தோற்றுவித்திருந்த நிலையில், அது குறித்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

புதுவருட தினத்தன்று அவதானிக்கப்பட்ட இந்த முகில் உருவத்தை Joey Mataele என்ற பெண் புகைப்படமாக எடுத்திருந்தார்.

சூரிய ஒளியினூடு தகதகத்த அந்த உருவத்தின் உடல், கால், தலை என்பனவற்றை தன்னால் தெளிவாக அவதானிக்கக்கூடியதாக இருந்ததென Joey Mataele கூறியுள்ளார்.

இது தனது வாழ்வில் இடம்பெற்ற ஒரு அதிசயம் எனவும் அந்த உருவம் நிச்சயம் வானிலிருந்து வந்த தெய்வீக சக்தி எனத் தான் நம்புவதாகவும் Joey Mataele 7 News இடம் தெரிவித்துள்ளார்.

 


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now